கேரள மக்களுக்கு உடனடி தேவையான மருந்துகள் பட்டியலை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார். பேஸ்புக் வீடியோ மூலமாக அவர் வைத்த வேண்டுகோளை இங்கு காணலாம்!
கேரளா, வரலாறு காணாத வெள்ளம் காரணமாக நிலை குலைந்து போயிருக்கிறது. அண்டை மாநில அரசுகள், திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறார்கள். முகம் தெரியாத சாதாரண பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவிகளை உரிய அமைப்புகள் மூலமாக கேரளாவுக்கு அனுப்பி வைத்தப்படி இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் முன்னணி தமிழ் நடிகையும், கேரளாவை சேர்ந்தவருமான கீர்த்தி சுரேஷ் திருவனந்தபுரம் சமஸ்கிருத கல்லூரியில் அமைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு விசிட் அடித்தார். அங்கு என்னென்ன தேவை என்பது குறித்து தனது ஃபேஸ்புக்-கில் வீடியோவாக பேசி வெளியிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் ஃபேஸ்புக் வீடியோ மூலமாக கேட்டிருக்கும் பொருட்களின் பட்டியல் இதோ:
திருவனந்தபுரம் சமஸ்கிருத கல்லூரி தொடர்பு எண்: 9539075952
1)துடைப்பான்(Broom), 2)நீளமான நீர் உறிஞ்சும் துடைப்பான் ( Mop), 3)டெட்டால் (Dettol), 4)பிளீச்சிங் பவுடர் (Bleaching powder), 5)சுத்தப்படுத்தும் திரவம் (Cleaning lotion), 6)கொசுவர்த்தி சுருள் ( Mosquito coil), 7)கொசுவர்த்தி திரவம் (Mosquito Liquid), 8)Soap (சோப்பு), 9)சுத்தப்படுத்த உதவும் பிரஷ் (Scrubbers), 10)Rubber gloves (ரப்பர் கையுறை), 11)ரப்பர் காலுறை (Rubber boots), 12)ஆண்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் (Under garments - Ladies and gents), 13)டூத் பிரஷ், பற்பசை (Tooth brush and paste), 14)முதலுதவி உபகரணங்கள் ( First aid kits), 15)ஃபீடிங் பாட்டில் (Feeding bottle), 16)கொசு வலை (Baby net), 17)லுங்கி, நைட்டிகள் மற்றும் ஆடைகள் (Dress materials for all - Lungi,Nighties/Maxi,etc), 18) டார்ச் லைட் (Torch), 19)பேட்டரி (Battery)
கீர்த்தி சுரேஷ் கேட்டிருக்கும் மருந்துகள் பட்டியல் இதோ:
1)டிக்லோஜெல்- Diclogel
2)க்ளோட்ரிமஸோல் களிம்பு - Clotrimazole ointment
3)டோக்ஸிகேப் - Doxycap
4)சிபிஎம் மாத்திரை (அவில்) - CPM tablet(Avil)
5)பான்டாப் மாத்திரை - Pantop tablet
6)டோம்பெரிடோன் மாத்திரை மற்றும் ஸிரப் - Domperidone tablet and syrup
7)டெல்மிசர்டான் 40 மில்லிகிராம் - Telmisartan 40 mg
8)அம்லோடிபைன் 5 மி.கி., - Amlodipine 5 mg
9) ஜலதோஷத்திற்கான ஸிரப் - Cough syrup pead
10)அஸ்தாலின் ஸிரப் - Asthalin syrup
11)அமாக்ஸிசைலின் ஸிரப் - Amoxycyllin pd.syrup
12)ஒமிப்ரஸோல் - Omeprazole
13)மெட்ரோனைடஸோல் மாத்திரை மற்றும் களிம்பு - Metronidazole tab and ointment
14)சிப்ளாக்ஸ் 500 மி.கி - Ciplox 500 mg
15)சிட்ரிஸைன் 10 மி.கி. - Citrizine 10 mg
16)ஆக்மெண்டின் 625 - Augmentin 625
கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கும் பட்டியல்படி அனுப்ப விரும்புகிறவர்கள் அவர் வெளியிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.