கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை தமிழக மக்கள் வழங்கவேண்டுமென்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தமிழில் டுவிட் பதிவுகளை இட்டுள்ளார்.
இந்த வருடம் கேரளாவில் மழைக்கெடுத்தியல் அதிகமாக பாதிக்கப்பெட்டது வயநாட் மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும் தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த ஊரு மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 13, 2019
இயற்கை பேரிடர் பாதிப்பு தொடர்பாக, கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரள மாநிலத்தில் பெய்த கனமழை அதைத்தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலச்சரிவு உள்ளிட்டவைகளின் காரணமாக 95 பேர் பலியாகியுள்ளனர். இந்த இயற்கை பேரிடரில் சிக்கி மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான தமிழக மக்கள், தங்களால் இயன்ற அளவிலான உதவியை, கேரள மாநிலத்திற்கு வழங்கிட வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கெடுத்தியால் பாதிக்கப்பெட்டவர்களுக்கும் உயிர் இழந்தவரின் குடும்பதார்க்கும் முடிந்த அளவு உதவி பண்ண கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. செவ்வாய் கிழமை சாயந்தனம் வரைக்கும் 91 நபர்கள் உயிர் இழந்தார்கள். 1243 அரசு முகாம்களிலாக 224506 மக்கள் தங்கிவருகிறார்கள்
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 13, 2019
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நிவாரண உதவிகள் தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயன், தமிழில் பல டுவிட்டுகளை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, கனமழையில் சிக்கி 95 பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு புலம்பெயரவைக்கப்பட்டுள்ளனர்.
நூற்றாண்டு கண்ட பெரு வெள்ளதுக்க ஒரு வருடம் பிறகுதான் இந்த பேரழிவு என்கிறதும் குறிப்பிடத்தக்கது. UN மதிப்பீடு பிரகாரம் இந்த நெருக்கபியை மீண்டுவதற்கு 31,000 கோடி ரூபா தேவை.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 13, 2019
இயற்கை பேரிடரின் பாதிப்பில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை, கேரள அரசு விரைந்து செய்துவருகிறது. வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் உள்ள மக்கள், இன்னும் அதிர்ச்சிகளிலிருந்து மீளவில்லை. மக்களுக்கு உதவ, தமிழக மக்களாகிய உங்களது உதவியை நாடியுள்ளேன். தங்களால் முடிந்தவரை சிறிய உதவியோ அல்லது பெரிய உதவியோ தயங்காது உங்களது கேரள சகோதர மக்களுக்கு வழங்கி உதவி செய்யுங்கள்.
இந்த சூழ்நிலையில் கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ய்பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
கேரள மக்களுக்கு உங்க உதவிகள் மிகை தேவை. சிருதா, பெரிதா வேற்பாட இல்லை.. முடிந்த அளவுக்கு உதவுங்கள்.— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 13, 2019
கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.என்று அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வடக்கு மாவட்டங்களான மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.