கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் உயிரையும் துட்சமாக எண்ணி மீட்பு பணியில் ஈடுப்பட்டு வரும் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு பெண்கள் ராயல் சல்யூட் அடித்துள்ளனர்.
Advertisment
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா:
இயற்கை எழில் பொங்கும் அழகு தேசமான கேரளா தற்போது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வரலாறு காணாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் உடைமைகளை, வீடுகளை இழந்து வாடி வருகின்றன.
கேரளாவின் நிலையைக் கண்டு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர். தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து நிவாரண நிதிகள் கேரளாவுக்கு அனுப்பட்ட வருகின்றனர். ஒருபக்கம் வெள்ளம் பாய்ந்துக் கொண்டிருக்க, மறுபக்கம் மக்கள் பாம்பு பீதியில் உறைந்து உள்ளனர்.
சமீபத்தில் இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில், மக்கள் தங்கி இருக்கும் நிவாரண முகாம் அருகில் 5 அடி நீளமுள்ளமலைப்பாம்பு ஒன்று படுத்துக் கொண்டிருந்தது. வெள்ளத்தால் காடுகளில் இருந்த பாம்புகள் ஒட்டுமொத்தமாக அடித்து வரப்பட்டுள்ளன.
இவ்வளவு போராட்டங்களிலும் மக்களுக்காக துணையாக நின்றுக் கொண்டிருப்பவர்கள் பேரிடர் மீட்புக் குழுவினர். தங்களின் உயிரையும் துட்சமாக எண்ணி இவர்கள் செய்யும் அர்பணிப்பு கணக்கிட முடியாதவை. சமூகவலைத்தளங்களில் கேரளாவில் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வரும் மீட்புக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பாலமாக நிற்கும் மீட்புக் குழுவினர்
இந்நிலையில், கேரள பெண்கள் அனைவரும் மீட்புக் குழுவினர் அனைவருக்கும் ராயல் சல்யூட் என்று புகழ்ந்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பில் அவர்கள் செயல்படும் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்துள்ளது.
அதற்கு எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டுள்ள வீடியோ ஒன்று உங்கள் பார்வைக்கு...