கல்லூரி பேராசிரியரின் பாலியல் கருத்துக்கு மாணவிகள் எதிப்பு : முகநூலில் மேலாடையின்றி புகைப்படம் பதிவேற்றம்; இருவரின் கணக்குகள் முடக்கம்

கேரள மாவட்டம் கோழிகோட்டில் அமைந்துள்ளது ஃபரூக் பயிற்சி கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஆசிரியர், பெண்கள் அணிந்து வரும் ஆடை குறித்து பாலியல் கருத்து வெளியிட்டார். அது குறித்த வீடியோ பதிவு வெளியானதைத் தொடர்ந்து ஆசிரியர் மீது கண்டங்கள் தெரிவிக்கப்பட்டன.

அந்த வீடியோ பதிவில் ஆசிரியர் மற்றொருவரின் மார்பை தர்பூசணியால் மூடியபடி காட்சிப்படுத்திக் கல்லூரி மாணவிகளின் ஆடை ஒழுக்கம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் “ நான் கல்லூரி ஆசிரியர். 80% சதவீதம் பெண்கள் படிக்கும் அக்கல்லூரியில் அதிகமான பெண்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அப்பெண்கள் இஸ்லாம் மதத்தைக் கலங்கப்படுத்தும் வகையில் ஆடை அணிகிறார்கள். தனது ஹிஜாப்பை கொண்டு மார்பு பகுதியை மறைக்காமல் தர்பூசணியை போல் மார்பக பகுதியை காட்சியளிக்கிறார்கள். பர்தாவை ஒழுக்கமாக அணியாமல் தனது லெக்கிங்க்ஸ் பேண்ட் தெரியும்படி அணிகிறார்கள்.” என்று வீடியோ காட்சியோடு கூறியிருந்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இரண்டு மாணவிகள் மேலாடையின்றி, தர்பூசணியைக் கொண்டு மார்பகங்களை மறைத்து புகைப்படம் எடுத்தனர். அதனை முகநூலில் பதிவேற்றம் செய்து அவ்வாசிரியருக்குக் கண்டனம் தெரிவித்தனர். கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தப் பதிவேற்றத்தை முகநூல் நீக்கியதோடு அந்த இரு பெண்களின் கணக்குகளையும் முடக்கினர்.

இச்சம்பவம் தொடர்பாக பெண்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். “ஆடை என்பது ஒருவரின் விருப்பம். என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை அப்பெண் தீர்மானிக்க வேண்டும். ஆண்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஆடை அணிகின்றனர். இதையே பெண்கள் செய்தால் அவமானப்படுத்துவகின்றனர். நிர்வாணம் என்ற வார்த்தை கூட ஆண்கள் வாழ்வில் சாதாரணம், ஆனால் அதுவே பெண்கள் நிர்வாணம் பெரும் பாவமாகக் கருதப்படுகிறது. எத்தனைக் காலம் கண்டனம் தெரிவித்தாலும் எந்த மாற்றமும் இல்லை.” என்று வேதனையுடன் தெரிவித்தார் மற்றொரு பெண்.

பெரும் கருத்து சர்ச்சை ஏற்பட்டுள்ள இந்த விவகாரத்தில் பெண்களுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தாலும், சிலரிடம் இருந்து அதராவும் பெருகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close