திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் இருந்து 30 கிலோ தங்கத்தை கடத்த முயன்றது தொடர்பாக, யுஏபிஏ சட்டத்தை செயல்படுத்திய, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), நான்கு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
சாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா
இந்த வழக்கை மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ விசாரிக்க அனுமதித்த ஒரு நாள் கழித்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதன்மையான பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் தங்கக் கடத்தல் விஷயத்தை ஏன் விசாரிக்கிறது என்பதை விளக்கி, என்ஐஏ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. "நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இந்தியாவுக்கு அதிக அளவு தங்கம் கடத்தப்பட்ட வழக்கு என்பதால், இது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் 15-வது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, ஒரு பயங்கரவாத செயலாகும். மேலும், இந்த வழக்கில் தேசிய மற்றும் சர்வதேச தொடர்புகள் இருப்பதால், கடத்தப்பட்ட தங்கத்தின் வருமானம், இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கு பயன்படுத்தப்படலாம் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ எடுத்துள்ளது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் வழக்கை விசாரிக்கவில்லை என்றும் இதுபோன்ற குற்றங்கள் அதன் கால அட்டவணையில் இல்லை என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த வழக்கை பதிவு செய்ய என்ஐஏ யுஏபிஏவை அழைக்க வேண்டியிருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
”தூதரக அலுவலகத்தில் முன்னாள் செய்தி தொடர்பாளரான சரித் பி.எஸ் என்பவரை என்.ஐ.ஏ முதல் குற்றவாளியாக பட்டியலிட்டது. தூதரகத்திற்கு சரக்குகளை அனுப்பிய முன்னாள் துணைத் தூதரக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர் மற்றும் ஷார்ஜாவைச் சேர்ந்த பாசில் ஃபரீத் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்” என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”மேற்கூறிய சரக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இராஜதந்திர சாமான்களில் மறைக்கப்பட்டிருந்தது. இதனை ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய சரித் பி.எஸ். பெற்றிருந்தது சுங்கத் துறையின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்தது. சரித் பி.எஸ். இதற்கு முன்னர் இதுபோன்ற பல சரக்குகளைப் பெற்றிருக்கிறார்” என என்.ஐ.ஏ அறிக்கை தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இராஜதந்திர சரக்குகளிலிருந்து 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தது. சரக்கைப் பெறச் சென்ற சரித் கைது செய்யப்பட்டார். மாநில தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் பெயர் அடிப்பட்டபோது, இந்த வழக்கு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஸ்வப்னாவை பணியமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் முதல்வரின் முதன்மை செயலாளருமான எம்.சிவசங்கர் ஜூலை 6-ம் தேதி, அப்பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தலைமறைவாக உள்ள ஸ்வப்னாவின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரித்தது. தான் நிரபராதி என்றும், சுங்கச்சாவடிகளில், சரக்குகளை செயல் தூதரகம்-ரஷீத் காமிஸ் அல் ஷீமிலிக்கு அனுப்பியது மட்டும் தான் நான் செய்தது என்றும் ஸ்வப்னா கூறினார். தற்போதைய தூதரக ஜெனரல், கோவிட்டைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பியிருந்தார்.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கேரளாவில் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி, காங்கிரஸ், பாஜக, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை மாவட்ட தலைமையிடங்களில் போராட்டம் நடத்தின.
72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா?
இந்த சம்பவம் குறித்து மத்திய நிறுவனங்களின் "பயனுள்ள மற்றும் ஒருங்கிணைந்த" விசாரணை கோரி, முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த வழக்கை சுங்கவரித்துறையிடமிருந்து என்.ஐ.ஏ-விடம் MHA வியாழக்கிழமை ஒப்படைத்தது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.