சிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்!

மக்களை ஏமாற்றுவதிலும் இரு கட்சிகளும் ஒன்று தான்

மக்களை ஏமாற்றுவதிலும் இரு கட்சிகளும் ஒன்று தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொல்லத்தில் மோடி பேச்சு

கொல்லத்தில் மோடி பேச்சு

சிபிஎம் அரசு கலாச்சாரம், ஆன்மீகம், பண்பாடு இவை எதையுமே மதிக்காது என்று அனைவருக்குமே தெரியும் என கேரள அரசை பிரதமர் மோடி சாடி பேசியுள்ளார்.

Advertisment

கொல்லத்தில் மோடி பேச்சு:

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் விதமாக அந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணங்களை தொடங்கி உள்ளார். அந்தவகையில்  நேற்று  மோடி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து கேரளாவின் கொல்லத்தில் இரண்டு திட்டங்களை துவங்கி வைத்து உரையாற்றினர். அப்போது, சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் நடைபெறும் இடதுசாரிகள் அரசையும், எதிர்கட்சியான காங்கிரசையும் கடுமையாக சாடினார்.

Advertisment
Advertisements

பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது, “சபரிமலை விவகாரத்தில், சிபிஎம் அரசின் நடவடிக்கை வரலாற்றில் எந்த அரசாங்கத்தின் மீதும் இல்லாத அவமானகரமான நடவடிக்கையாக இடம்பெறும்.

சிபிஎம் அரசு ஆன்மீகத்தையும், மதத்தையும் ஒருபோதும் மதித்தது இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அது மிகவும் வெட்கக்கேடான விஷயமாக மாறும் என்று யாரும் நினைத்ததில்லை.

அதே போல் சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலையை கடைபிடிப்பதும் அம்பலமாகியுள்ளது. காங்கிரஸ் பல நிலைப்பாடுகளை கொண்டுள்ளது. பார்லிமென்டில் ஒன்றை கூறுவார்கள். பத்தனம்திட்டாவில் வேறொன்றை கூறுவார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். இதன்மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இந்த திட்டத்தில் பலனடைய முடியும்.

சிபிஎம் -யும், காங்கிரசும் பெயரளவில் தான் வெவ்வேறு அரசு, ஆனால் கேரள இளைஞர் சக்தியை வீணடிப்பதில் இரண்டு அரசும் அச்சு அசலாக ஒரே மாதிரி தான் செயல்படுகிறது.   அவர்கள் ஏழைகளையும் புறக்கணித்து வருகின்றனர் என்பது 100 சதவீத உண்மை. கேரள மக்களை ஏமாற்றுவதிலும் இரு கட்சிகளும் ஒன்று தான்” என்று தெரிவித்துள்ளார்.

முதலில், கேரள அரசின் ஆட்சி முறை மற்றும் போக்குவரத்து வளர்ச்சி, நகர வளர்ச்சி குறித்தும் மோடி பேசி இருந்தார்.

Narendra Modi Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: