Advertisment

மே.வ, மகாராஷ்ட்ரா வரிசையில் கேரளம்; சி.பி.ஐ விசாரணை இனி சவாலானது தான்!

கேரளாவில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை விதித்தது கேரள உயர் நீதிமன்றம்.

author-image
WebDesk
New Update
கேரளாவில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை விதித்தது கேரள உயர் நீதிமன்றம்.

kerala government withdraws general consent accorded to CBI to probe cases : மத்திய புலனாய்வு அமைப்பானது டெல்லி சிறப்பு காவல் நிறுவன சட்டத்தின் கீழ் இயங்குகிறது. ஒரு மாநிலத்தில் நடக்கும் விவகாரங்களை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றால் அந்த விசாரணையை நடத்துவதற்கு மாநில அரசின் ஒப்புதல் மிக முக்கியமாகும்.

Advertisment

இந்த ஒப்புதல் சில காலத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும்.  ஆனால் பாஜக ஆட்சிக்கு பிறகு, எதிர்கட்சிகளை பழி வாங்க சி.பி.ஐ. அமைப்பு தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று பல மாநிலங்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். 2018ம் ஆண்டு, சி.பி.ஐக்கு விசாரணைக்கு வழங்கப்பட்ட முழுமையான ஒப்புதலை திரும்ப பெற்றது மேற்கு வங்க அரசு. இதனை தொடர்ந்து சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சி.பி.ஐக்கான ஒப்புதல் வாபஸ் பெறப்பட்டன.

மகாராஷ்ட்ராவில் டி.ஆர்.பி. ரேட்டிங் தொடர்பான புகார்களை விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறை முடிவு எடுத்த நிலையில் மகாராஷ்ட்ர அரசும் சி.பி.ஐக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றது. கேரளாவில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை விதித்தது கேரள உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, கேரள அரசு சி.பி.ஐக்கு வழங்கி வந்த முழுமையான ஒப்புதலை நேற்று திரும்பப் பெற்றது. மாநில மத்திய அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இனி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு மாநில அரசின் முன் அனுமதி பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment