தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே போல, தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 11-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், இப்போதே, அடுத்த குடியரசுத் தலைவர் யார்? குடியரசு துணைத் தலைவர் யார் என்ற பேச்சுகளும் ஊகங்களும் எழுந்துள்ளன.
அதன்படி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பெயர் பரிசீலனை செய்யப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகளும் ஊகங்களும் எழுந்துள்ளன.
70 வயதாகும் ஆரிஃப் முகமது கான் செப்டம்பர் 2019-ல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் உயர் பதவிக்கு பரிசீலனை செய்யப்படுகிறது என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், ஆரிஃப் முகமது கான் சமீப காலமாக பலமுறை டெல்லிக்கு பயணம் செய்துள்ளது மேலும் இந்த ஊகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. முன்பைவிட ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இருப்பினும், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பெயர் இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் ஊகங்களும் பேச்சுகளும் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஊடக விவாதத்தின்பொது, ஆரிஃப் முகமது கானுக்கு உயர்பதவி கிடைக்க உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, கேரள ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று பேச்சுகளும் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“