கேரளத்தில் அரசுக்கும் ஆளுனருக்கும் இடையே மோதல் போக்கு முற்றிவருகிறது. இந்த நிலையில் மோதலை மேலும் தீவீரப்படுத்திய ஆளுனர் ஆரிப் முகம்மது கான், முதலமைச்சர் பினராய் விஜயனின் தனிச்செயலளர் கே.கே. ராகேஷின் மனைவி பரியா வர்கீஸின் பணி நியமனத்தை நேற்று (ஆகஸ்ட் 17) நிறுத்திவைத்தார்.
பிரியா வர்க்கீஸ் கண்ணூர் துறைமுகத்தில் இணைப் பேராசிரியர் ஆக நியமிக்கப்பட இருந்தார். இந்ந நிலையில் விதிமீறியதாக புகார் எழுந்தது. தற்போது இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரன், ஆளுனரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட போவதாக தெரிவித்தார். முன்னதாக ஜூன் மாதம் 27ஆம் தேதி கவர்னர் மாளிகையில் இருந்து கண்ணூர் மாளிகைக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.
அந்த அறிக்கையில், “மறுஉத்தரவு வரும்வரை அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்” எனக் கோரப்படடிருந்தது. மேலும் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் விதியும் எடுத்துரைக்கப்பட்டன.
இந்த நியமனங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை பேசிய ஆளுனர் ஆரிப் முகம்மது கான், “ஒரு வேந்தராக நான் இருளில் உள்ளேன். பல்கலைக்கழகத்தில் விதிமீறல்கள் நடந்துள்ளன” என்றார்.
இந்த நிலையில் ஆளுனர் ஆரிப் முகம்மது கானிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் நேர்முகத் தேர்வில் வர்கீஸ் பெற்ற மதிப்பெண்கள் குறைவு.
மேலும் முனைவர் பட்டத்திலும் அவர் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளார். ஆனால் அவரை அவசரப்பட்டு நியமிக்க நினைக்கின்றனர். இது கண்ணூர் பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆளுநர் பிரியா வர்கீஸின் நியமனத்தை நிறுத்தினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் பிரியா வர்கீஸின் நியமனத்தை நிறுத்த ஆளுநருக்கு உரிமையில்லை என துணை வேந்தர் ரவீந்திரன் தரப்பு கூறுகிறது.
இதற்கிடையில் ரவீந்திரன் மீண்டும் துணை வேந்தராக நியமிக்கப்பட்டதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஆளுனர் ஆரிப் முகம்மது கான், “துணை வேந்தராக ரவீந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் தனது அழுத்தம் கொடுக்கப்பட்டது என்றார்.
பிரியா வர்கீஸின் கணவர் ராகேஷ் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்தவர் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil