அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஐந்து தவனைகளில் கழிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தைத் தொடர்ந்து, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நிதி திரட்ட, கேரள அமைச்சரவை அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கு ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க புதன் கிழமை முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை அடுத்து ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை கழிக்க கேரள அரசு முன்னர் முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து அரசு ஊழியர்களின் சங்கங்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அரசின் இந்த உத்தரவை அம்மாநில உயர் நீதிமன்றம் 2 மாதங்களுக்கு தடை விதித்தது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் தொற்று நோய்கள் சட்டத்திலோ அல்லது பேரிடர் மேலாண்மை சட்டத்திலோ இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, அமைச்சரவை இந்த அவசரச் சட்டத்தை பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர மொத்த சம்பளத்தில் 30 சதவீதம் குறைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க ஆளுநர் பரிந்துரைப்பார் என்றும் கூறினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Kerala govt decide to issue ordinance for salary cut of govt employees in emergencies pinrayin vijayan press meet
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!