Advertisment

விரலுக்குப் பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை: கேரள அரசு டாக்டர் சஸ்பெண்ட்

சிறுமியின் விரலுக்குப் பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த கேரள அரசு மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் பெஜான் ஜான்சனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.

author-image
WebDesk
New Update
Kerala govt doctor operates on childs tongue instead of finger suspended Tamil News

சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அரசு டாக்டர் பெஜான் ஜான்சன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வயது சிறுமி தனது ஆறாவது விரலை அகற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த சில  மணிநேரங்களுக்குப் பிறகு, தவறுதலாக அவருடைய நாக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

அறுவைசிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் வாயில் பஞ்சு அடைக்கப்பட்டதைக் கண்ட குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கூர்ந்து கவனித்ததில், அறுவைசிகிச்சையானது  சிறுமியின் நாக்கில் செய்யப்பட்டது என்றும், அவர்கள் நினைத்தபடி அவது கையில் அல்ல என்றும் கண்டறிந்தனர். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Kerala govt doctor operates on child’s tongue instead of finger, suspended

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் விரலுக்குப் பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் பெஜான் ஜான்சனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. 

மருத்துவக் கல்வி இயக்குனரிடம் இருந்து அறிக்கை வந்ததையடுத்து, டாக்டர் பெஜான் ஜான்சனை சஸ்பெண்ட் செய்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்தார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமாறும், நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யாத மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்  வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில், சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அரசு டாக்டர் பெஜான் ஜான்சன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு டாக்டர்  மீது ஐ.பி.சி பிரிவுகள் 336 (மற்றவர்களின் உயிருக்கோ தனிப்பட்ட பாதுகாப்புக்கோ ஆபத்து) மற்றும் 337 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் பேசுகையில், “மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற அனுபவம் இனி யாருக்கும் ஏற்படக் கூடாது. இந்த நடைமுறையால் குழந்தைக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். ஒரே தேதியில் இரண்டு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டதால் இந்த தவறு நிகழ்ந்து என்று மருத்துவமனை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். இப்போது சிறுமியின் நாக்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை " என்று கூறினர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment