New Update
/indian-express-tamil/media/media_files/pyfLDafo5FqS3eAZBQUJ.jpg)
ஆர்எஸ்எஸ் வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக களமிறங்கியுள்ளது, இது கேரளாவில் உள்ள கோயில்களின் அன்றாட விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் சிபிஐ(எம்) முயற்சியின் ஒரு பகுதியாகும்.
ஆர்எஸ்எஸ் வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக களமிறங்கியுள்ளது, இது கேரளாவில் உள்ள கோயில்களின் அன்றாட விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் சிபிஐ(எம்) முயற்சியின் ஒரு பகுதியாகும்.
கேரள அரசு உயர் நீதிமன்ற உத்தவை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட தீவிர சித்தார்ந்த குழுக்கள் மாநில அரசின், “திருவிதாங்கூர் தேவசம் போர்டு”க்கு சொந்தமான கோவில் மற்றும் வளாகங்களில் செயல்பட தடை விதித்தன.
இதற்கு ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “இது கேரளாவில் உள்ள கோவில்களின் அன்றாட விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் சி.பி.ஐ.(எம்) முயற்சியின் ஒரு பகுதியாகும்” எனக் கூறியுள்ளது.
சபரிமலை உள்ளிட்ட கேரளாவில் உள்ள 1200-க்கும் மேற்பட்ட கோவில்களை கட்டுப்படுத்தும் வாரியம் அக்டோபர் 20-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது,
அதில், ஆர்எஸ்எஸ் அல்லது தீவிர சித்தாந்தங்களைக் கொண்ட அமைப்புகள் வெகுஜன ஒத்திகைகள் அல்லது ஆயுதப் பயிற்சிகளை நடத்துகின்றனவா என்பதைக் கண்டறிய கோயில்களில் திடீர் சோதனை நடத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது.
மேலும் அதில், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற அமைப்புகள் பல கோவில்களின் வளாகங்களில் அத்துமீறி நுழைந்து கோவில்களின் புனிதத்தன்மை மற்றும் பக்தர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
இந்த அமைப்புகள் ஆயுதப் பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைகளை நடத்தி வருகின்றன” என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, “கோவில்களில் ஆர்.எஸ்.எஸ் அல்லது தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோயில்களுக்கு தொடர்பில்லாத நபர்களின் புகைப்படங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் சின்னங்கள் மற்றும் கொடிகளை கோயில்கள் அல்லது அவற்றின் வளாகங்களில் இருந்து உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஆர்எஸ்எஸ் நடத்தும் வெகுஜன ஒத்திகைகளுக்கு எதிராக கேரளாவில் உள்ள சிபிஐ(எம்) அரசு முன்வந்திருந்தாலும், திருவாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் உத்தரவில் வேறு பல ஷரத்துக்கள் உள்ளன.
இது வர்கலாவில் உள்ள ஸ்ரீ சர்க்கரா தேவி கோவில் தொடர்பாக கடந்த மாதம் முதல் உயர் நீதிமன்ற உத்தரவில் இருந்து பெறப்பட்டது.
இரண்டு பக்தர்களின் மனு மீது நடவடிக்கை எடுத்த நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், கோயிலில் உள்ள சொத்துக்கள் மற்றும் விவகாரங்களை TDB நிர்வகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், "இந்த கோவிலின் வளாகத்தில் வெகுஜன பயிற்சி அல்லது ஆயுத நடைமுறைகள் அனுமதிக்கப்படக்கூடாது" என்று நீதிமன்றம் கூறியது.
தொடர்ந்து, “திருவாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு கோவிலில் திருவிழாக்களுக்கு குங்குமப்பூ / ஆரஞ்சு நிற அலங்காரப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு ஒரு வழிபாட்டாளர் அல்லது பக்தருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை" என்று முந்தைய தீர்ப்பையும் பெஞ்ச் மேற்கோள் காட்டியது.
இது குறித்து ஆர்எஸ்எஸ் பிரந்த காரியவஹக் (மாநில பொதுச் செயலாளர்) பிஎன் ஈஸ்வரன், “கோயில்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கும் சுற்றறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது.
கேரளாவில் உள்ள கோவில்களை சிபிஐ(எம்) கைப்பற்ற விரும்புகிறது. கோயில்களில் ஆர்.எஸ்.எஸ்.-ஐக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் சுற்றறிக்ககள் வெளியாகின.
ஆனால் இந்த முறை அதிக செயல்பாடுகளை உள்ளடக்கிய உத்தரவு கடுமையாக உள்ளது.
கோவில் வளாகத்தில் போட்டோ கூட வைக்க முடியாது. கோவில்களில் பிரார்த்தனை மற்றும் பணம் செலுத்த பக்தர்களின் பங்கு குறைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளால் எந்த கோவிலிலும் இப்போது பதற்றம் இல்லை. இந்த உத்தரவு கேரளாவில் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை” என்றார்.
மேலும், பல கோவில்களில் உள்ள ஆலோசனைக் குழுக்கள் கலைக்கப்பட்டு, சிபிஐ(எம்) நிர்வாகிகள், ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் இதுவரை கோவில்களில் உள்ள அதிகாரிகள் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக செயல்படவில்லை. பல கோயில்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அன்றாடப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். எங்கள் பணியாளர்களை கோவில் விவகாரங்களில் இருந்து விலக்கி வைப்பது அவ்வளவு எளிதல்ல” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.