New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/sabarimalatemple-759.jpg)
sabarimala, sabarimala news, sabarimala news today, sabarimala news in tamil, ஐயப்பன் பாடல்கள், சபரிமலை செய்திகள் இன்று
கடந்த ஆண்டுக்கு முன்பு வரை சபரிமலையில் எந்த முறை பின்பற்றப்பட்டதோ அதனையே 7 பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பு வெளியாகும் வரை தொடருவோம்
sabarimala, sabarimala news, sabarimala news today, sabarimala news in tamil, ஐயப்பன் பாடல்கள், சபரிமலை செய்திகள் இன்று
Kerala govt’s flip-flop on Sabarimala Crisis : உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வுக்காக கொடுக்கப்பட்ட மனுக்கள் அனைத்தையும் ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற குழுவிற்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே வெளியேன தீர்ப்பின் சாதக பாதகங்களை மனதில் கொண்டு இளம் பெண்களை இனிமேல் சபரிமலைக்கு அனுமதிக்கமாட்டோம் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் சபரிமலையில் பெண்கள் செல்லலாம் என்று உத்தரவிட்ட போது கேரள அரசு நடந்து கொண்டதற்கு முற்றிலும் வேறுபட்டதாக அமைந்திருக்கிறது தற்போதைய நடவடிக்கை.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற சவாலான நடவடிக்கைகளை மேற்கொண்டது கேரள அரசு. ஆனால் அதற்கு பின்பு கேரளா முழுவதும் நடைபெற்ற மாநிலம் தழுவிய போராட்டம் மற்றும் 20 நாடாளுமன்ற தொகுதிகளில் வெளியான தேர்தல் முடிவுகள் போன்ற காரணங்களால் தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது கேரள அரசு.
சபரிமலை செல்லும் சீசன் இன்று முதல் ஆரம்பமாகின்ற நிலையில் இந்து குழுக்கள் பெண்கள் வருகையை அனுமதிக்க கூடாது என்றும், மீறி அனுமதித்தால் போராட்டத்துக்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்தது. சி.பி.எம். தலைவர் மற்றும் தேவசம் போர்ட் அமைச்சர் கடகம்பள்ளி சுந்தரன் கூறுகையில் “கடந்த ஆண்டுக்கு முன்பு வரை சபரிமலையில் எந்த முறை பின்பற்றப்பட்டதோ அதனையே 7 பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பு வெளியாகும் வரை தொடருவோம்” என்று அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : சபரிமலை தீர்ப்பில் இருந்து எப்படி மாறுபடுகிறது அயோத்தி வழக்கின் தீர்ப்பு?
அனைவரும் அரசிற்கு ஒத்துழைப்பினை நல்கி சபரிமலை தரிசனத்தை அமைதியாக நடத்துவோம் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு பெண்கள் அனுமதி குறித்து அவரிடம் கேட்ட போது, “அப்போது நம் முன்னே தீர்ப்பு இருந்தது. அதனை செயல்படுத்தினோம். ஆனால் இன்று நிலைமை வேறாக இருக்கிறது. புரட்சி என்ற பெயரில் சுற்றிப்பார்க்க சபரிமலை சரியான இடம் இல்லை. இந்த வருடம் பெண்களின் வருகைக்கு தடை தான். அப்படி யாரேனும் சபரிமலைக்கு செல்ல விரும்பினால் தாராளமாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி வாங்கி வரட்டும் என்றும் அவர் கூறினார்.
’சி.பி.எம். மத்திய கமிட்டி உறுப்பினர் மற்றும் சட்ட அமைச்சருமான ஏ.கே. பாலன் ”இம்முறை சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது. யாரேனும் இருக்கும் நிலையை சீர் குழைக்க விரும்பி கோவிலுக்கு செல்ல முயன்றால், நிச்சயம் அரசு அதனை தடுத்து நிறுத்தும்” என்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு பெண் போராளிகள், சிந்தனையாளர்கள், இளம் பெண்கள் என பலரும் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முற்பட்டனர். ஆனால் இருவர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக காவல்துறை உதவியுடன் கோவிலுக்குள் சென்று திரும்பினர். ஆனால் அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தால் பலரும் கோவிலுக்கு செல்வதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டனர். இதனால் ரூ. 200 கோடி வரை திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு வருமானம் குறைந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதனை வேறொரு பெஞ்சுக்கு மாற்ற மூன்று நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். நரிமன் மற்றும் சந்திரசூட் தலைமை நீதிபதியின் கருத்துக்கு மாறான கருத்துகளை முன் வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.