Advertisment

தனியார் காடுகள் முதல் லோக் ஆயுக்தா வரை; கேரள ஆளுநர் கையெழுத்திட மறுத்த 11 அவசரச் சட்டங்கள் காலாவதி

கேரள மாநில சட்டப் பேரவையில் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, அவசரச் சட்டங்களை மீண்டும் பிறப்பிக்க கேரள அரசு முயற்சி செய்வதை ஆளுநர் எதிர்த்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala Governor demands resignation of nine Vice-Chancellors

கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான்

கேரளாவில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 11 அவசரச் சட்டங்கள் காலாவதியானதைத் தொடர்ந்து, மீண்டும் அவசரச் சட்டங்களாக அறிவிப்பதற்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் திங்கள்கிழமை மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்ததையடுத்து அந்த சட்டங்கள் காலாவதியானது. இந்த அவசரச் சட்டத்துக்கு, ஏதேனும் அவசரம் இருக்கிறதா என்பதைப் பார்த்து தனது உளத்தேர்வின்படிதன் இந்த உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று ஆரிப் முகமது கான் கூறினார். மேலும், 2017 உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, அவசரச் சட்டங்களை மீண்டும் வெளியிடுவது ஜனநாயக செயல்முறையை தகர்ப்பதற்கு சமம் என்று கூறினார்.

Advertisment

ஆகஸ்ட் 8, 2022 அன்று காலாவதியான 11 அவசரச் சட்டங்கள்:

  1. கேரள லோக் ஆயுக்தா திருத்தம் அவசரச் சட்டம்

கேரள அரசின் கேரள லோக் ஆயுக்தா சட்டம் 1999, சட்டத் திருத்தம் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. தற்போது, ​​லோக் ஆயுக்தாவின் தீர்ப்பை அரசு ஏற்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. முன்மொழியப்படுள்ள இந்த திருத்தத்தின் மூலம், லோக் ஆயுக்தாவின் தீர்ப்பை கேட்கும் வாய்ப்பிற்குப் பிறகு, தீர்பை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும். மேலும், இந்த சட்டத்தின்படி, லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படும் ஒருவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ பதவி வகித்திருக்க வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை லோக் ஆயுக்தாவாக நியமிக்கும் வகையில் அவசரச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

publive-image

தேசிய அளவில், வலுவான மற்றும் பயனுள்ள லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாதிட்டபோது, ​​ஊழல் எதிர்ப்புக் கண்காணிப்புக் குழுவின் சிறகுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முறிக்கிறது என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.

  1. கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் (சில நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களைப் பொறுத்து கூடுதல் செயல்பாடுகள்) திருத்த அவசரச் சட்டம்

இந்தத் திருத்தம், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு நடத்தும் நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்புகளைப் பற்றியது. அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகளால் அடிக்கடி பாதிக்கப்படும் அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் நேரடி ஆட்சேர்ப்புகளை சரிபார்ப்பதற்கானது இது என்று அரசாங்கம் கூறியது. கேரள விவசாயத் தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், கேரள கடைகள் மற்றும் வணிக நிறுவனத் தொழிலாளர் நல நிதி வாரியம் ஆகியவற்றுக்கான நியமனங்களை இந்தத் திருத்தம் உள்ளடக்கும். இந்த நிறுவனங்களை கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (சில கார்ப்பரேஷன்கள் மற்றும் நிறுவனங்களைப் பொறுத்து கூடுதல் செயல்பாடுகள்) சட்டம், 1970ன் கீழ் சேர்க்க, அந்தச் சட்டத்தில் ஒரு திருத்தம் தேவை என்கிறது.

  1. கேரள கால்நடை மற்றும் கோழி தீவனம் மற்றும் தாதுக் கலவை (உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துதல்) அவசரச் சட்டம்

பாதுகாப்பான மற்றும் தரமான தீவனத்தை உறுதி செய்யவும், கேரளாவில் தீவனப் பொருட்கள், கால்நடைகள், கோழித் தீவனம் மற்றும் தாதுக் கலவை உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தவும் புதிய சட்டத்தை கொண்டு வர அரசு விரும்புகிறது. தற்போது, ​​மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் தீவனம், தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானது. மீதமுள்ள தேவைக்கு மற்ற மாநிலங்களில் இருந்து பூர்த்தி செய்யப்படுகிறது. தவிர, தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது.

  1. கேரள கடல்சார் வாரியம் திருத்த அவசரச் சட்டம்

2017 ஆம் ஆண்டில், மாநில அரசு கேரள கடல்சார் வாரியத்தை உருவாக்கியது. துறைமுக இயக்குநரகம், கடல்சார் மேம்பாட்டுக் கழகம் மற்றும் கடல்சார் நிறுவனம் ஆகியவற்றை இந்த வாரியத்தின் கீழ் கொண்டு வந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த வாரியத்தின் முக்கிய நோக்கம், பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்ட கடலோர மேம்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிக்கிறது. இந்த வாரியம் அமைக்கப்பட்ட 2017 சட்டத் திருத்தம், ஒரு நிர்வாகியை நியமிப்பதைத் தவிர, வாரியத் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் பதவிக்காலத்தை நிர்ணயிக்கிறது. இந்தத் திருத்தம் துறைமுக இயக்குனரகத்தின் அனைத்து ஊழியர்களையும் கடல்சார் வாரியத்தின் கீழ் கொண்டு வந்தாலும், அவர்கள் மாநில அரசு ஊழியர்களாகவே தொடர்வார்கள்.

  1. கேரள தனியார் காடுகள் (விருப்பம் மற்றும் பணி) திருத்த அவசரச் சட்டம்

1971-ம் ஆண்டு கேரள தனியார் காடுகள் (விருப்பம் மற்றும் ஒதுக்கீடு) சட்டம், தனியார் காடுகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கும், அவற்றை விவசாயிகளுக்கு சாகுபடிக்காக ஒதுக்குவதற்கும் வழங்குகிறது. 1963 ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்படி, வாங்கியதற்கான சான்றிதழானது குத்தகைதாரருக்கு ஒதுக்கப்பட்ட பணி மற்றும் நில உரிமையாளரின் உரிமைகளுக்கான உறுதியான சான்று. 2019 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் வாங்கிய சான்றிதழானது, நில உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட நிலத்தை சாகுபடி செய்யும் குத்தகைதாரராக வைத்திருந்ததற்கும், அந்த நிலத்திற்கு உரிமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கும் சான்று என்று கூறியது. இப்போது இந்த நிலை அரசிடம் உள்ள தனியார் காடுகளை இழக்க வழிவகுக்கும் என்றும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகளில் மாநில நலனைப் பாதிக்கும் என்றும் அரசாங்கம் அஞ்சுகிறது. இந்தச் சட்டம் 1971ஆம் ஆண்டு முதல் மறுபரிசீலனை செய்து திருத்தப்பட்டு வருகிறது.

  1. கேரள தொழில்துறை ஒற்றைச் சாளர அனுமதி வாரியங்கள் மற்றும் தொழில் நகர்ப் பகுதி மேம்பாட்டு திருத்த அவசரச் சட்டம்

இந்த சட்டம் கேரள தொழில்துறை ஒற்றைச் சாளர அனுமதி வாரியங்கள் மற்றும் தொழில் நகர்ப் பகுதி மேம்பாட்டு சட்டம் என்ற பெயரில் உள்ள 1999 ஆம் ஆண்டு சட்டம், நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நகரங்களை நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான பல்வேறு உரிமங்கள், அனுமதிகள் மற்றும் சான்றிதழ்களை விரைவாக வழங்குவதற்கு உதவுகிறது. மாநில வாரியத்திற்கு உதவவும், பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் ஒரு செயலகத்தை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

  1. கேரள பொது நிறுவனங்களின் தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு வாரிய அவசரச் சட்டம்

தொழில் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கு ஒரு தன்னாட்சி வாரியத்தை உருவாக்குகிறது.

  1. கேரள பொது சுகாதார அவசரச் சட்டம்

மாநிலத்தில் பொது சுகாதாரம் தொடர்பான தற்போதைய சட்டங்களை ஒருங்கிணைத்து, பொது சுகாதாரத்தில் சிறந்த மேலாண்மை மற்றும் கையாளுதல் ஆகியவற்றை வழங்குவதற்கான ஒரு அவசரச் சட்டம். கேரளாவில், 1939 ஆம் ஆண்டு மெட்ராஸ் பொது சுகாதார சட்டம் மற்றும் 1955 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சின் பொது சுகாதார சட்டம், பொது சுகாதார அவசரநிலைகளில் தற்போது நடைமுறையில் உள்ளது. பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் கோவிட் போன்ற நோய்கள் சமாளிக்கப்படுகிறது.

  1. கேரள நகைத் தொழிலாளர் நல நிதி திருத்த அவசரச் சட்டம்

தங்கம் மற்றும் பிற உலோகங்களை பதப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் நலனை உறுதி செய்வதற்காக ஒரு நிதியத்தை உருவாக்குவதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த நிதிக்கு தொழிலாளர்களின் பங்களிப்பை மாதம் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்துவதற்காக இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் உறுப்பினர் செலுத்தும் தொகையில் ஐந்து சதவீதத்தை அரசாங்கம் வருடாந்திர பங்களிப்பாக வழங்கும்.

  1. கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்டம்

1969 ஆம் ஆண்டு சட்டத்தில் முன்மொழியப்பட்ட இந்த திருத்தம் பால் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செயலில் உள்ள பால் பண்ணையாளர்கள் மட்டுமே கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதன் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினர்களாக இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மண்டல கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகக் குழுக்களின் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக மூன்று முறை வரை வரையறுக்கவும், இந்தச் சங்கங்களில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் இந்த திருத்தம் முன்மொழிகிறது. மாநில பால் கூட்டுறவு மில்மாவின் ஜனநாயக செயல்பாட்டுக்கு குழிபறிக்கும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எந்த ஒரு சங்கத்தையும் கலைத்து, அதை ஒரு நிர்வாகியின் கீழ் கொண்டுவரும் அதிகாரத்தை இந்த திருத்தம் அரசுக்கு வழங்குகிறது.

  1. கேரள உள்ளாட்சி நிர்வாகப் பணியாளர் அவசரச் சட்டம்

இதில் முன்மொழியப்பட்ட சட்டம் பஞ்சாயத்து, நகராட்சி, உள்ளாட்சித் துறை (திட்டமிடல்) ஆகியவற்றின் கீழ் உள்ள சேவைகள் மற்றும் ஊரக மேம்பாடு மற்றும் உள்ளாட்சி உள்ளாட்சி நிர்வாகத்தில் பொறியியல் பிரிவின் சேவைகளை ஒருங்கிணைத்து உள்ளாட்சி நிர்வாகப் பணியை உருவாக்க முன்மொழிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Cpim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment