Kerala hartal today : கேரள மாநிலம், காசர்கோடு மாநிலத்தில் உள்ள பெரியா என்ற இடத்தில் இரண்டு இளைஞர்கள் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரிபேஷ் மற்றும் சரத் லால் என்ற அந்த இளைஞர்கள் பெரியா அருகில் இருக்கும் கலியோத் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். க்ரிபேஷ் சம்ப இடத்திலேயே உயிரிழக்க, மங்களூரில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆளும் சி.பி.எம். கட்சி தான் இதற்கு காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தன்னுடைய ஜனமஹா யாத்ரையை ரத்து செய்துவிட்டார். பினராயி விஜயன் இந்த கொலைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இன்று முழு கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது காங்கிரஸ்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்த கொலைகளுக்கு கடுமையான கண்டனங்களை அறிவித்துள்ளனர். க்ரிபேஷ் மற்றும் சரத் லால் இதற்கு முன்பு நடைபெற்ற சி.பி.எம் தொண்டர்களின் கொலைவழக்கில் சம்பந்தம் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
February 2019
உயர் நீதிமன்றம் கண்டனம்
இவர்களின் கொலையை தொடர்ந்து மாநிலம் தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது காங்கிரஸ். ஏற்கனவே சபரிமலை விவகாரம் தொடர்பாக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வர, கேரள உயர் நீதிமன்றம், கடையடைப்பிற்கு தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் கடையடைப்பு நடைபெற நீதிமன்ற அவமதிப்பாக இதனை அறிவித்தது கேரள உயர் நீதிமன்றம்.