Advertisment

கேரளாவில் அதிகரிக்கும் போதை பொருள் பயன்பாடு :  கடந்த  6 வருடங்களில் 300% அதிகரித்த வழக்குகள்

கேரள காவல்துறை மற்றும் கலால் துறையினர் தொடர்ந்து போதை மருந்து கடத்துலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருவதால், போதை பொருள், மதுபானம் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
கேரளாவில் அதிகரிக்கும் போதை பொருள் பயன்பாடு :  கடந்த  6 வருடங்களில் 300% அதிகரித்த வழக்குகள்

கேரள காவல்துறை மற்றும் கலால் துறையினர் தொடர்ந்து போதை மருந்து கடத்துலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருவதால், போதை பொருள், மதுபானம் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளது.

Advertisment

கேரள காவல்துறையால்  பதிவு செய்யப்பட்ட தகவல் படி, போதை பொருள் தடுப்பு சட்டமான,  என்.டி.பி.எஸ் சட்டத்தில்  கடந்த  2022ம் ஆண்டு 26, 629 வழக்குகள் பதிவாகி உள்ளது. 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ஒப்பீடுகையில் இது 300 % அதிகமாகும்.  2016-ம் ஆண்டு 5,924  வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் அதாவது 2019-ம் ஆண்டில்  9,245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டை தொடர்ந்து போதை பொருட்கள் கடத்தல் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளது. கொரோன காலத்தில் ஆதாவது 2020 மற்றும் 2021-ல் குறைந்த வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆனால் 2022 இது அதிகரித்துள்ளது.

இதுபோல காலல் துறையில் உள்ள தகவலின் படி, என்.டி.பி.எஸ் சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களின் சதவிகிதம் , 87.47 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுபோல 2016 முதல் 2022 வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் சதவிகிதம் 104 % மாக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக  கேரள கூடுதல் டிஜிபி மற்றும் கலால் கமிஷனர் கூறுகையில் “ கெடுபிடியான சோதனையும், ரய்டுகளும், கைதும் தான் அதிகரிகும் போதை பொருள் புழக்கத்திற்கு காரணம் . சிந்தட்டிக் போதை பொருட்களான எம்.டி.எம்.ஏ மற்றும் எல்.எஸ்.டி பயன்பாடு இளைய தலைமுறையிடம் அதிகரித்து வருகிறது. நண்பர்கள் வட்டாரம் இதை பயன்படுத்த அவர்களை தூண்டுகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment