கேரளாவில் நேற்றிரவு பெய்த அதிதீவிர கனமழையின் காரணமாக பல மாவட்டங்களில் மிக பெரிய மழை வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றிரவு 7-மணியளவில் தொடங்கிய கனமழை அதிகாலை வரை கொட்டிதீர்த்தது. இதனால் பல இடங்களில் மழை வெள்ள சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணாமாக நிலச்சரிவுகள், மலை உச்சிலிருந்து பாறை கற்கள் சரிந்து சாலையில் விழந்துள்ளது. பலத்த காற்றின் காரணமாக மரங்களும் முறிந்து விழந்துள்ளன. இதனால் பல இடங்களில் சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. பல வீடுகளுக்கு அருகே மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கடுத்து ஒடுகின்றன. ஆபத்தான இடங்களில் வசித்து வரும் பொதுமக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் தொடர்ந்து அதிதீவிர கானமழைக்கு வாய்ப்புள்ளதால் இரவு நேர போக்குவரத்திற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல சுற்றுலாதளங்கள் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்கள் தோறும் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளது. சில அணைகளில் கனமழை காரணமாக தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. அடுத்த 24" மணிநேரத்தில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மீட்டு பணிகளுக்காக பேரிடர் குமுவினர் தயார் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையேகேரள மாநிலம் வயநாடு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும்அங்குள்ள தற்போதைய சூழ்நிலையை விவரித்து பதிவு செய்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஹக்கீம் வெளிட்டுள்ள வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதனிடையே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளில் சிக்கி இருந்தவர்களை கேரள மாநில பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பி. ஏ.முகமது ரியாஸ் மற்றும் வருவாய் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் கே.ராஜன் ஆகியோர் மீட்டனர்.
பேரிடர் ஏற்பட்ட பகுதிக்கு நேற்று காலை விரைந்த பந்தலூரை சேர்ந்த மருத்துவ குழுவில் இருந்த செவிலியர் ஒருவர் கயிறு மூலம் தொங்கியபடி சிகிச்சை அளிப்பதற்காக ஆற்றின் மறுகரைக்கு சென்றார்.இரண்டாவது நாளான இன்றும் அந்த குழுவினர் விபத்து நடந்த பகுதியில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்று மீட்பு பணியில் ஈடுபடும் போது காயமடையும் தன்னார்வலர்கள் மற்றும் மீட்பு படையினருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“