377 சட்டம்: இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பினர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக செப்டம்பர் 6ம் தேதி உச்ச நீதிமன்றம் இந்திய சாசனச் சட்டம் 377 ஐ நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றம் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பினை தற்போது அறிவித்திருக்கிறது.
40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன்னுடைய பெண் காதலியுடன் ஒரே வீட்டில் வாழ அனுமதி கேட்டு வழக்கொன்றை தொடுத்துள்ளார். கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் மேற்கு கல்லடா பகுதியில் வாழ்ந்து வருகிறார் ஸ்ரீஜா என்னும் பெண்மணி. நெய்யட்டிங்கரா பகுதியில் வசித்து வருபவர் அருணா. அவருக்கு வயது 24 ஆகும்.
377 சட்டம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள் காட்டிய நீதிபதிகள்
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அருணாவின் பெற்றோர்கள் தன் மகளைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
To read this article in English
விசாரணைக்காக நேரில் ஆஜரான அருணாவை அவர்களின் பெற்றோர்கள் அழைத்துச் சென்று மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மருத்துவமனைக்கு சென்று அருணாவையும் பார்த்து வந்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் இருந்து அருணாவை வெளியில் விட மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா, அருணா என்னோடு தான் வாழ வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். அதனை விசாரித்த கேரள உச்சநீதிமன்றம் அருணா ஸ்ரீஜாவுடன் வாழலாம் என்று உத்தரவிட்டு தீர்ப்பினை வழங்கியது. இந்த வழக்கினை சி.கே. அப்துல் ரஹிம் மற்றும் நாராயண பிஷரதி அடங்கிய அமர்வு விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.