அதானிக்கு விமான நிலையம் குத்தகை: கேரளா வழக்கு தள்ளுபடி

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார்மயமாக்கியதற்கு எதிராக கேரளா அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அம்மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இது கேரள அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

By: Updated: October 20, 2020, 12:30:58 PM

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார்மயமாக்கியதற்கு எதிராக கேரளா அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அம்மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இது கேரள அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கேரளாவில் உள்ல திருவனந்தபுரம் விமான நிலையத்தின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு 50 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மாநில அரசு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. தனியார்மயமாக்கல் வசதிகளைப் பெறும் 6 விமான நிலையங்களில் ஒன்றான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமம் 2019 பிப்ரவரி மாதம் குத்தகை மற்றும் பராமரிப்புக்கான ஏலங்களை எடுத்தது.

இந்த தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக கேரள அரசு மற்றும் கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (கே.எஸ்.ஐ.டி.சி) தாக்கல் செய்த பல மனுக்களை கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், டி.ஆர்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

விமான நிலையத்தை ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான முடிவு கொள்கை அடிப்படையிலானது. அது மத்திய அமைச்சரவையின் ஆதரவைக் பெற்றுள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஒப்புகொண்டது.

மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை அது முடித்துவிட்டது என்ற அடிப்படையில் அது முன்னுரிமைக்கு தகுதியானது என்ற மாநில அரசாங்கத்தின் வாதத்துடன் ஒத்துப்போக முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இந்த ஏல செயல்பாட்டில், பங்கெடுத்துவிட்டு பின்னர் அதே செயல்முறையை தவறாகக் கூறுவது நியாயப்படுத்த முடியாது என்று கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியது. மேலும், அதானிக்கு ஏற்றவாறு ஏல செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற கேரள அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

அரசு நிலத்தில் கட்டப்பட்ட விமான நிலையத்தை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது அரசின் நலன்களுக்கு எதிரானது என்றும், பயணிகளின் நலன்களை மனதில் வைத்திருப்பதால் பயணிகள் கட்டணத்திற்கு அதிகமான ஏலத்தை மேற்கோள் காட்டவில்லை என்றும் கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த விமான நிலையத்தை பராமரிப்பதற்காக ஒரு பயணிக்கு ரூ.168 என்ற அதானி ஏலத்துக்கு நிகரானதை முதல்வர் ஒப்புக் கொண்டபோதும் அது புறக்கணிக்கப்பட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளா இந்த ஏல நடைமுறையில் ஒரு ‘சிறப்பு நோக்கம் கொண்ட வாகனம்’ மூலம் பங்கேற்றது. அது முதல் ஏல மறுப்புக்கான உரிமை அல்லது அதன் ஏலத்தை சிறந்த ஏலதாரரின் 10% வரம்பிற்குள் வந்தால் வென்ற ஏலத்துடன் போட்டிபோடுவதற்கு ஏற்பாடு வழங்கப்பட்டது. இருப்பினும், கேரள அரசாங்கத்தின் சார்பாக கே.எஸ்.ஐ.டி.சி-யின் ஏலம் ஒரு பயணிக்கு ரூ.135 ஆக இருந்தது. அதானியின் ஏலம் ரூ.168 க்கு எதிராக – 19.64% குறைவாக இருந்தது. அதனால், இந்த ஏற்பாடு செய்வதற்கு தகுதியற்றதாக இருந்தது.

அதானி குழுமத்திற்கு விமான நிலையத்தை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர், கேரள அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியது. போராட்டத்தில் கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரசும் கைகோர்த்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை நிர்வகிப்பதற்கான அதானியின் ஏலத்தை சவால் செய்ய முன்வந்த பிறகும் மத்திய அரசு நிராகரித்ததாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தைத் தவிர, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் குவஹாத்தி ஆகிய ஐந்து விமான நிலையங்களை நடத்துவதற்கான உரிமையை அதானி பெற்றுள்ளார். இந்த செயல்பாட்டில் அதானி எண்டர்பிரைசஸ், ஜி.எம்.ஆர் விமான நிலையங்கள், கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (கே.எஸ்.ஐ.டி.சி), கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் மற்றும் சூரிச் விமான நிலையம் உள்ளிட்ட எட்டு நிறுவனங்கள் 2019 பிப்ரவரியில் உரிமைகளை பெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Kerala high court dismissed kerala govts plea against thiruvantjapuram airport lease to adani

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X