கேரளாவில் பெய்த கன மழையால் இரண்டு நாட்களுக்கு முன்பு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை மீட்கும் பணி பணி நடந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி கிட்டத்தட்ட 20 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
நிலச்சரிவு ஏற்பட்டதில் மன்னுகுள் புதைந்தவர்களை தேடுவதற்காக மீட்பு பணி அதிகாரிகள் மோப்ப நாய்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக முணாறு அருகே ராஜமலையில் தேயிலைத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கே தேயிலைத் தோட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் 78 பேர் 30 அறைகளில் குடும்பத்துடன் தங்கி இருந்தனர். அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பிக்க முடியவில்லை. நிலச்சரிவால் மூணாறில் இருந்து ராஜமலைக்கு செல்லப்படும் பாலங்கள் சாலைகள் சேதமடைந்தது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 55 பேர் கொண்ட குழுவை வழிநடத்தும் பணி தென்னிந்திய மாநிலத்தின் என்.டி.ஆர்.எஃப் தலைவர் ரேகா நம்பியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. ராஜமலை நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களுக்கும் இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை மறுத்தார். விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ.10 லட்சம் அறிவித்திருந்தது.
இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வருவதால், ஏற்பட்ட இழப்பு குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி மதிப்பீடு செய்யவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"