கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சளி, வைரஸ் காய்ச்சல், டெங்கு, எச்1என்1 போன்ற பல்வேறு தொற்று நோய்களுக்கு எதிராக மாநில சுகாதாரத்துறை வியாழக்கிழமை பொதுமக்களை எச்சரித்துள்ளது. பறவைக் காய்ச்சல் மற்றும் மூளையை உண்ணும் அமீபா (amoebic meningoencephalitis) ஆகியவற்றுக்கு எதிராகவும் எச்சரித்துள்ளது.
தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள் முகக்கவசம் அணிவதை சுகாதாரத் துறை கட்டாயமாக்கியுள்ளது.
மாநில அளவிலான ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (RRT) கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை மற்றும் ஓய்வு அளிக்கவும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் சிறந்த சிகிச்சையை உறுதி செய்வதற்கும் ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக காய்ச்சல் அல்லது காய்ச்சலுடன் மூச்சுத் திணறல், அதிக படபடப்பு, நெஞ்சு வலி, சுயநினைவு இழப்பு, பேசுவதில் சிரமம், சளியில் ரத்தம் அல்லது அதிக சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளை வளர்ப்பவர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.
இறந்த பறவைகள் அல்லது விலங்குகளைக் கையாளும் எவரும் நோய் அறிகுறிகளை உடனடியாக சுகாதார ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
முகக்கவசம் அணிவது, சமூக விலகல் மற்றும் கை சுகாதாரம் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவற்றைத் தடுக்க முடியும். H1N1 பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் முக்கியம்.
மருத்துவமனைக்கு வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் நோய் பதிவாகியுள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேங்கி நிற்கும் நீரில் குளிப்பதையும், நீர் நிலைகளில் குளிப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தீம் பார்க் மற்றும் நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய முறையாக குளோரினேஷன் செய்ய வேண்டும்’ என்று மாநில சுகாதரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Read in English: Kerala govt issues warning on infectious diseases, mandates masks in hospitals
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“