Advertisment

நீண்ட போராட்டத்துக்குப் பின்… உ.பி சிறையில் இருந்து வெளியே வந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன்

ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது, பத்திரிகையாளர் சித்திக் கப்பன் உ.பி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, லக்னோ சிறையில் இருந்து வியாழக்கிழமை விடுதலையானார்.

author-image
WebDesk
New Update
Siddique Kappan, Siddique Kappan jail, Siddique Kappan released, Siddique Kappan bail, பத்திரிகையாளர் சித்திக் கப்பன், சிறையில் இருந்து விடுதலை, சித்திக் கப்பன், ஹத்ராச், உத்தரப் பிரதேசம், kerala journalist Siddique Kappan news, Siddique Kappan bail news, news, Tamil indian express

அக்டோபர் 2020-ல் உத்தரப் பிரதேசத்தில், ஒரு தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஹத்ராஸுக்குச் செல்லும் போது கைது செய்யப்பட்டனர்.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது, பத்திரிகையாளர் சித்திக் கப்பன் உத்தரப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, லக்னோ சிறையில் இருந்து பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வியாழக்கிழமை விடுதலையானார்.

பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை லக்னோ மூத்த சிறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார். அவருடைய அனைத்து ஆவணங்களும் சரிபார்த்து முடிக்கப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் என்று ஆஷிஷ் திவாரி கூறினார்.

அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் டிசம்பர் 23-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்கு மேலான பிறகு, சித்திக் கப்பனின் விடுதலை வந்துள்ளது.

விடுதலையான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்திக் கப்பன், ஜாமீன் பெற்று விடுதலை பெறுவது நீண்ட போராட்டமாக இருந்தது என்று கூறினார். “28 மாதங்கள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, நான் இன்று வெளியே வந்துள்ளேன். ஊடகங்களில் இருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்துள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று சித்திக் கப்பன் கூறினார்.

அவர் மீது போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு, “நான் அங்கு (ஹத்ராஸில்) ரிப்போர்ட் செய்ய சென்றிருந்தேன். அதில் என்ன தவறு?…என்னிடம் மடிக்கணினி மற்றும் மொபைல் போன் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. என்னிடம் இரண்டு பேனாக்கள், ஒரு நோட்புக் இருந்தது.” என்று கூறினார்.

சித்திக் கப்பன் மற்றும் 3 பேர் மதுராவில் அக்டோபர் 5, 2020-ல் ஹத்ராஸுக்குச் செல்லும் போது கைது செய்யப்பட்டனர்.

உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சிங் பிறப்பித்த உத்தரவில், “உடன் கைதான அதிக்குர் ரஹ்மானின் வங்கிக் கணக்கில் ரூ. 5,000 பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தவிர, குற்றம் சாட்டப்பட்ட-விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலோ அல்லது இணை குற்றம் சாட்டப்பட்டவரின் வங்கிக் கணக்கிலோ வேறு பரிவர்த்தனை எதுவும் இல்லை.” என்று கூறியது.

பிணைத் தொகை ரூ. 1 கோடிக்கும் குறைவாக இருப்பதால், கப்பன் எதிர்காலத்தில் அதே குற்றத்தைச் செய்ய வாய்ப்பில்லை என்பதால் கப்பனை ஜாமீனில் விடுவிக்க தகுதி உள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, தீவிர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உ.பி காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட (யு.ஏ.பி.ஏ) வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

யு.ஏ.பி.ஏ வழக்கில் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கும் போது, உச்ச நீதிமன்றம் அவருக்கு எதிராக சரியாக என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்று விசாரித்தது, மேலும் காவல் காலம் எவ்வளவு காலம் என்று குறிப்பிட்டது.

டிசம்பரில், லக்னோ நீதிமன்றம் சித்திக் கப்பன் மற்றும் 6 பேர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதில் கே.ஏ ரவூப் ஷெரிப், அதிகுர் ரஹ்மான், மசூத் அகமது, முகமது ஆலம், அப்துல் ரசாக் மற்றும் அஷ்ரப் காதிர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் மாணவர் பிரிவான கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment