கேரளாவில் பாஜகவுக்கு இடமில்லை.. அமோக வெற்றியை வசப்படுத்திய இடதுசாரிகள்!

941 கிராமப் பஞ்சாயத்துகளில் கம்யூனிஸ்ட் 515-ம் காங்கிரஸ் 376-ம் பாஜக 22-ம் மற்றவர்கள் 28-ம் பிடித்துள்ளனர்.

941 கிராமப் பஞ்சாயத்துகளில் கம்யூனிஸ்ட் 515-ம் காங்கிரஸ் 376-ம் பாஜக 22-ம் மற்றவர்கள் 28-ம் பிடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Unease in CPM over ordinance BJP and Congress call it bid to gag free speech

kerala local body election LDF : கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 8, 10 மற்றும் 14-ம் தேதிகளில் மூன்று கட்டமாக நடைப்பெற்றது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என அனைத்து உள்ளாட்சிகளுக்குமான தேர்தலில் 50% பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.

Advertisment

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கல்லூரி மாணவிகளில் தொடங்கி இளம் பெண்கள்வரை 20 வயதுகளில் உள்ள பலர் களம் இறங்கினர். சி.பி.எம், காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்துக்கட்சிகளிலும் இளம் பெண்களுக்கு அதிகளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. 3 கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை முதல் என்ணப்பட்டன. காலை நிலவரப்படி இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்தன. பா.ஜ., ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பின்தங்கி இருந்தது.

வழக்கம் போல் தலைநகரமான திருவனந்தபுரமும் முதல்வர் பிணராய் விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூாிலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. வாக்கு எண்ணப்பட்ட ஒரு சில மணி நேரத்திலே முடிவுகள் வெளிவரத் தொடங்கின. பஞ்சாயத்து வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை சட்டமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற ரேஞ்சுக்கு அந்தந்த கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். வெற்றிபெற்ற பெண் வேட்பாளர்களைக் கூட தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

Advertisment
Advertisements

இதில் நடந்து முடிந்த மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கிராமப் பஞ்சாயத்துகளின் மொத்த முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 6 மாநகராட்சியில் கம்யூனிஸ்ட் 4-ம் காங்கிரஸ் 2-ம் பிடித்தது. அதில் முக்கியமாக எதிர்பார்க்கபட்ட திருவனந்தபுரம் மாநகராட்சியைத் தொடர்ந்து மீண்டும் கம்யூனிஸ்ட் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 52 வார்டுகளைக் கைப்பற்றி தக்க வைத்துள்ளது. மேலும் பா.ஜ.க கடந்த முறை போல் 35 வார்டுகளைக் கைப்பற்றி 2-ஆம் இடத்திலும் காங்கிரஸ் 10 வார்டுகளைப் பிடித்து மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் மேயர் வேட்பாளராக குன்னுகுழி வார்டில் போட்டியிட்ட ஒலினா தோல்வியடைந்தது கம்யூனிஸ்ட்டுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அந்த வார்டில் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.

இதேபோல் மொத்தமுள்ள 86 நகராட்சியில் காங்கிரஸ் 45-ம் கம்யூனிஸ்ட் 35-ம் பாஜக 2-ம் மற்றவர்கள் 4-ம் பிடித்துள்ளனர். மாவட்டப் பஞ்சாயத்தைப் பொறுத்த வரை மொத்தமுள்ள 14-ல் கம்யூனிஸ்ட் 10-ம் காங்கிரஸ் 4-ம் பிடித்தன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 108 கம்யூனிஸ்ட்டும், 44 காங்கிரசும் கைப்பற்றியுள்ளது. 941 கிராமப் பஞ்சாயத்துகளில் கம்யூனிஸ்ட் 515-ம் காங்கிரஸ் 376-ம் பாஜக 22-ம் மற்றவர்கள் 28-ம் பிடித்துள்ளனர்.

ஆளும் கட்சி கம்யூனிஸ்டாக இருந்தாலும் உள்ளாட்சித் தோ்தலில் பா.ஜ.க திருவனந்தபுரம் மாநகராட்சி உட்பட கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாதிாியான முடிவை பா.ஜ.கவினர் கொஞ்சமும் எதிா்பாா்த்து இருக்க மாட்டார்கள். ஆனால், கிராமப் பஞ்சாயத்து வார்டுகளில் அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னேற்றம் அடைந்துள்ளது. \

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: