கேரளா சிபிஎம் உள்ளூர் தலைவர் வெட்டிக் கொலை.. பின்னணியில் பாஜக என குற்றச்சாட்டு | Indian Express Tamil

கேரளா சிபிஎம் உள்ளூர் தலைவர் வெட்டிக் கொலை.. பின்னணியில் பாஜக என குற்றச்சாட்டு

கேரளா பாலக்காட்டில் ஆளும் சிபிஎம் கட்சி உள்ளூர் தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கேரளா சிபிஎம் உள்ளூர் தலைவர் வெட்டிக் கொலை.. பின்னணியில் பாஜக என குற்றச்சாட்டு

கேரளா மாநிலம் பாலக்காடு குன்னங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான், சிபிஎம் உள்ளூர் கமிட்டி உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 14) இரவு மருதா சாலையில் ஷாஜகான் இருந்தபோது, பைக்கில் வந்த ஒரு கும்பல் ஷாஜகானை வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நேற்று இரவு ஷாஜகான் வீட்டிற்கு அருகில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒரு கும்பல் ஷாஜகானை வெட்டிக் கொலை செய்துள்ளது. உடனிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்தார்” என்று தெரிவித்தனர்.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தன்று இருந்தவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றம் புரிந்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கொலைக்குப் பின்னணியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை பாஜக மாவட்ட தலைமை மறுத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kerala local cpim leader hacked to death in palakkad