Shaju Philip
Kerala local polls : கேரளாவில் மூன்று அடுக்குகளாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களில் நிறைய இளைஞர்கள் களம் இறங்கியுள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவிகள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் பெண்கள் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக முக்கிய கட்சிகளால் களம் இறக்கப்பட்டுள்ளனர். முன்னேற்றம் மற்றும் மக்கள் அரசியலை அணுகும் முறையில் மாற்றத்தை கொண்டு வரவே போட்டியிடுவதாக கூறியுள்ளனர்.
சங்கனஸெரியில் போட்டியிடும் யு.டி.எஃப். வேட்பாளர், இளைஞர்கள் அதிக அளவில் கள நிர்வாகத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் விரும்புவதாக கூறினார். தேர்தல்களில், வாழ்வாதாரத்திற்காக அரசியலில் ஈடுபடுபவர்களை நாம் கண்டிருக்கின்றோம். எங்களுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. உள்ளாட்சி மன்றங்களை இளைஞர்கள் நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 23 வயதாகும் ஆய்ஷா எம்.டெக் மாணவி. அரசியல் பின்புலம் ஏதும் இல்லாதவர். தேர்தலில் போட்டியிடுவது தன்னுடைய சொந்த முடிவு என்று கூறியுள்ளார்.
ஆலப்புழாவில் உள்ள அர்யாத் பஞ்சாயத்த்தின் சி.பி.ஐ (எம்.) கட்சியின் வேட்பாளர் கே.ஏ.அஸ்வினி சமூக பணிகளே அரசியலுக்கு வர காரணம் என்று கூறினார். தினக்கூலிக்கு செல்பவரின் மகளான அவர் சோசியல் வொர்க் பாடப்பிரிவில் பட்டமேற்படிப்பு படித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கடற்கரை கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதாக கூறும் அவர், அதன் தாக்கமே அரசியல் ஈடுபாட்டுக்கு காரணம் என்று கூறினார். சி.எஃப்.ஐ (எம்) இன் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐயின் உள்ளூர் அலுவலக பொறுப்பாளராக இருக்கும் அஸ்வினி அரசியலில் இதுவரை பெற்ற அனுபவம் பெரும்பாலும் கல்லூரி வளாகத்திற்குள் மட்டுமே.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நன்மந்தா பஞ்சாயத்தில் பாஜக அஸ்வினி பாலனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 23 வயதான அவர் பி.எட். படிப்பை முடித்துள்ளார். ”மாற்றங்களுக்கான நேரம் இது. வளர்ந்து மாற்றங்களுக்கு ஏற்றவகையில் முக்கிய அங்கம் வகிக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன் என்றார். கிராமப்புற நிர்வாகத்திற்கு நாம் கொண்டு வர வேண்டிய தொழில்நுட்பங்கள் நிறைய உள்ளன. நான் ஒரு பள்ளி ஆசிரியராக வேண்டும் என்ற கனவை கைவிடவில்லை," என்று கூறுகிறார் அஸ்வினி. அவரது கல்லூரி நாட்கள் அரசியலில் இருந்து விடுபட்டிருந்தாலும், அவரது குடும்பத்திற்கு பாஜக பின்னணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, மாணவிகள் மற்றும் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடிமட்ட நிர்வாகத்தில் பங்கேற்கக் காட்டிய விருப்பம், மாநிலத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் பொறுப்புகளில் இருக்கும் குடும்பஸ்ரீ மற்றும் ஆஷா தொழிலாளர்களை சார்ந்து இருப்பதைக் குறைக்க உதவியது. இவர்களில் பெரும்பாலானோர் குடிமைத் தேர்தல்களில் பெண்கள் வேட்பாளர்களை உருவாக்கினார்கள்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50% ஆக அதிகரித்த பிறகு விருப்பமுள்ள பெண் வேட்பாளர்களை கட்சி தேடியது. இருப்பினும், இந்த முறை, பல உள்ளாட்சி அமைப்புகளில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பொது இடங்களில் கூட பெண்கள் போட்டியிடுகின்றனர். கேரள உள்ளூர் கழகத்தின் இயக்குநர் டாகர் ஜாய் எலமோன் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ந்து வரும் பங்கைக் கருத்தில் கொண்டு இளைஞர்களின் ஈடுபாடு ஒரு நல்ல அறிகுறியாகும் என்று கூறியுள்ளார் அவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த தேர்தலில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. அடுத்த தலைமுறையினருக்கு தேவையான இடம் ஒதுக்கப்பட்டால் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது என்று அவர் கூறினார். அரசியலை கண்டு இளைஞர்கள் ஒதுங்கி போகவில்லை. அரசு சுகாதாரம், கல்வி, வீட்டுவசதிகள், விவசாயம் போன்ற துறைகளில் புதிய முயற்சிகளை புகுத்தும் நேரத்தில் அரசுக்கு புதிய தலைமுறையின் பிரதிநிதிகள் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில், உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு அதிக அளவில் பேரிடர் மேலாண்மை பொறுப்புகளை வழங்கியது அரசு. அவர்களின் சொந்த பேரிடர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த அனுமதித்தது. 2018ம் ஆண்டு வெள்ளம் பல தன்னார்வலர்களுக்கு கண் திறந்த நிகழ்வாக அமைந்தது. இந்த இளைஞர்கள், எவ்வாறு அரசு அமைப்புகள் முடிவுகளை வழங்கினர் என்று கண்டனர். அதோடு, சமூக பங்களிப்புக்கான பல்வேறு வழிகளை அரசு திறந்தது. பல நதிகளின் புத்துணர்ச்சி என்பது சமூக பங்களிப்பின் ஒரு முயற்சியாகும் என்றும் டாக்டர் ஜாய் கூறினார்.
"உள்ளாட்சி அமைப்புகளில் இளைஞர்களின் ஆர்வம், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள முன்னோக்குடன் ஒரு புதிய தலைமையைப் பெறுவோம் என்பதைக் காட்டுகிறது," என்று அவர் கூறினார். கோட்டாரக்கரா தொகுதியின் எம்.எல்.ஏவாக 2006ம் ஆண்டு முதல் இருந்து வரும் பி. ஆய்ஷா பாட்டி, மாநிலத்தில் பெண்கள் நீண்ட தூரம் முன்னேறி வந்துள்ளனர் என்று கூறினார். 33% இட ஒதுக்கீடு உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்டது 1995ம் ஆண்டு. ஆனால் நிறைய பெண்கள் தேர்தல் களத்தில் சேர தயாராக இல்லை. குடும்பத்தில் அவர்களுக்கான ஆதரவு குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பெண்கள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இப்போது நிறைய இளைஞர்கள் போட்டியிட தயாராக இருப்பதை பார்க்கின்றோம். அவர்கள் உள்ளூர் நிர்வாகத்திற்கு புதிய ஆற்றலை கொடுப்பார்கள் என்று அவர் கூறினார். டிசம்பர் 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.