Kerala Karunya Lottery result : இந்தியாவில் பல மாநிலங்களில் லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கேரளாவில் இப்போதும் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கேரள மக்களும் லாட்டரிகளை வாங்கிக் குவித்து அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது வழக்கம். கேரளாவில் அரசே லாட்டரி சீட்டுகளை வெளியிடுகிறது. அண்மையில், விஷூ பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு முதல் பரிசாக ரூ.5 கோடி என அறிவித்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வெளியிட்டிருந்தது.
அதில் தமிழகத்தை சேர்ந்த செல்லப்பா என்ற லாட்டரி டிக்கெட் வியாபாரிக்கு 5 கோடி ரூபாய் பரிசு தொகை அடித்திருந்தது. இந்நிலையில், இன்று 4 மணிக்கு கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி கே.என் -269 முடிவுகள் வெளியாகின்றன. கேரள மாநில லாட்டரி துறை இந்த முடிவுகளை அறிவிக்கின்றது.
கேரளா பவுர்ணமி லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியீடு : ரூ.70 லட்சம் வென்ற அதிர்ஷ்டசாலி யார்?
முதல் பரிசு ரூ .8 லட்சம், இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையே ரூ .1 லட்சம் மற்றும் ரூ .100,000. ஆறுதல் பரிசு ரூ .8,000.நேரடி முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 4 மணிக்கு http://www.keralalottery.com இல் தெரியவரும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ .40.
பரிசுத் தொகை ரூ .5,000 க்கும் குறைவாக இருந்தால், வெற்றியாளர்கள் கேரளாவில் உள்ள எந்த லாட்டரி கடையிலிருந்தும் பணத்தை கோரலாம். வென்ற தொகை 5,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், வெற்றியாளர்கள் அடையாளச் சான்றுகளுடன் வங்கி அல்லது அரசு லாட்டரி அலுவலகத்திற்கு முன்பாக டிக்கெட்டுகளை ஒப்படைக்க வேண்டும்.
இன்று வெளியாகும் காருண்யா லாட்டரி டிக்கெட்டின் 8 லட்சம் பரிசுத் தொகையின் வெற்ற்றியாளர் யார்? என்ற எதிர்பார்ப்பில் ஒட்டு மொத்த சேட்டன்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.