கேரளா மாநிலத்தை சேர்ந்த 27 வயதான டாக்டர் ஹதியாவின் மதம் மாற்றும் திருமணம் பல சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. முஸ்லிம் ஆக மதம் மாறி முஸ்லிம் இளைஞர் சாபின் ஜஹானை திருமணம் செய்துக்கொண்டார் ஹதியா. இதனை தொடர்ந்து, தன் மகள் கட்டாயப் படுத்தப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரின் பெற்றோர் உச்ச நிதி மன்றம் சென்றனர். விசாரித்த நீதி மன்றம் இந்த திருமணம் செல்லாது, ஹதியா பெற்றோருடன் இருக்க வேண்டும் என தீர்பளித்தது.
இந்த தீர்ப்பை அடுத்து மேல் முறையீடு செய்துள்ளார் ஹதியாவின் கணவர். இதனால் ஹதியா நவம்பர் 27 விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹதியாவின் தந்தை, ’விசாரணை நீதிமன்றதில் மூடப்பட்ட அறையில் ரகசியமாக நடக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்பொழுது பெற்றோர்களின் கவனிப்பில் இருக்கும் ஹதியாவை நவம்பர் 14 அன்று கேரள மாநில மகளிர் கமிஷன் தலைவர் எம் சி ஜோஸ்பின் சந்திக்க சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை என தெரிவித்திருந்தார்.
ஆனால் ஹதியாவை சமிபத்தில் சந்தித்ததாகவும் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கேரள மாநில மகளிர் கமிஷன் உறுப்பினர் ரேக்ஹா ஷர்மா கூறியுள்ளார்.