/tamil-ie/media/media_files/uploads/2020/06/corona-devi.jpg)
Kerala man prays Corona Devi daily at his home
கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு இன்னல்கள் உருவாகி வருகின்ற நிலையில் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். கேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிலன் என்பவர். கொரோனா வைரஸை கடவுளாக நினைத்து வழிபடும் அவர் தன் வீட்டில் வைத்திருக்கும் கொரோனா உருவத்திற்கு கொரோனா தேவி என்று பெயர் வைத்துள்ளார். தன்னுடைய பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் கொரோனா தேவிக்கு தினந்தோறும் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து வருகிறார்.
இவர் வழிபாடு செய்யும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாக பரவி வந்தது. இதனை பார்த்த பலரும் இது நிச்சயமாக கவனத்தை ஈர்ப்பதற்காகவும், சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரம் தேடுவதற்காகவும் தான் அனிலன் இப்படி நடந்து கொள்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளனர்.
ஆனால் அனிலனோ “இந்திய அரசியல் அமைப்பு எனக்கு அளித்திருக்கும் அடிப்படை உரிமைகளை வைத்து நான் கொரோனா வைரஸை தெய்வமாக வழிபடுகின்றேன். மக்களுக்குக்காக தன் உயிரையே பணயம் வைக்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் ஃப்ரெண்ட் லைன் ஊழியர்களுக்காக நான் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.