Kerala man quit smoke and saved 5 lakhs in last 8 years : ஒரு சிலர் தீவிர மதுப்பழக்கம் அல்லது புகைப்பழக்கத்திற்கு ஆளாகியிருப்பார்கள். யார் என்ன சொன்னாலும் கேட்காமல் புகைந்து தள்ளிக் கொண்டே இருப்பார்கள். ஒரு சிலருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை என்று வந்த பின்பு தான் விபரீதமே புரியும். 13 வயதில் இருந்து புகைப்பிடிக்க துவங்கிய கேரளாவின் வேணுகோபாலன் நாயர் தன்னுடைய 60 வயது வரை புகைப்பிடித்துக் கொண்டே இருந்துள்ளார். யோசித்து பாருங்கள் அவரின் நுரையீரல் என்னவாகியிருக்கும் என்று?
மேலும் படிக்க : எதனால் நடந்தது பெய்ரூட் விபத்து? அச்சம் தரும் பின்னணி!
ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகிரெட் என்ற ரீதியில் தினமும் புகைப்பிடித்துக் கொண்டே இருப்பாராம். நாள் ஒன்றுக்கு அதுவே 100 ரூபாய் ஆகிவிடும் (இன்றைய விலைக்கு எடுத்துக் கொண்டால்). ஆனால் காலப்போக்கில் இந்த புகையே இவருக்கு வினையானது. நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலியால் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளார் வேணுகோபாலன். தன்னுடைய 67 வயதில், உயிர் மீது இருக்கும் ஆசையால் புகைப்பிடித்தலை நிறுத்தியுள்ளார். புகைப்பிடித்தலுக்காக அவர் செலவு செய்யும் பணத்தை தினமும் சேமித்து உள்ளார். 8 வருடங்கள் கழித்து ரூ. 5 லட்சமாக அது உயர்ந்துள்ளது.
அந்த பணத்தை முறையாக செலவிட வேண்டும் என்று யோசித்த அவர், தன்னுடைய வீட்டின் மேலே கட்டிடம் ஒன்றை எழுப்பி வருகிறார். நீங்களும் கடுமையான புகைப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்தால், உங்களின் நிலையை நிச்சயம் மறுபரீசிலனை செய்து பார்ப்பது நல்லது. வேணு கோபாலனை நீங்கள் ஒரு முன்மாதிரியாக கொண்டு செயல்பாட்டாலும் நல்லது தானே.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil