Advertisment

சட்டவிரோத சிறுநீரக விற்பனை; ஈரானுக்கு இந்தியர்கள் கடத்தல்: கேரளாவைச் சேர்ந்தவர் கைது

ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் சபித் நாசரை கைது செய்துள்ளதாகவும், பணத்திற்கு உடல் உறுப்பு தானம் செய்யச் சொல்லி அவர் பலரையும் ஏமாற்றியுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Kerala man working in Tehran hospital trafficked Indians to Iran for illegal kidney transplants Tamil News

சபித் நாசர் கடந்த ஜூலை 2019 இல், ரூ 5 லட்சத்திற்கு ஈடாக தனது சொந்த சிறுநீரகத்தை தானம் செய்ய இலங்கை சென்றுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Sabith Nasar | Kerala | Iran: கேரளாவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் சேர்ந்தவர் சபித் நாசர் (30). சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்ற இவர், 2017 முதல் 2019 வரை திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வேலைகளைச் செய்துள்ளார். இதன்பின்னர், 2019 முதல் ஈரானின் தெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில்  உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு மாத சம்பளமாக ரூ 40,000 வழங்கப்பட்டுள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Kerala man working in Tehran hospital ‘trafficked Indians to Iran for illegal kidney transplants’

சபித் நாசர் கடந்த ஜூலை 2019 இல், ரூ 5 லட்சத்திற்கு ஈடாக தனது சொந்த சிறுநீரகத்தை தானம் செய்ய இலங்கை சென்றுள்ளார். அவருக்கு ஃபேஸ்புக் நட்பு வட்டாரத்தில் இருந்த ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் இந்த பயணத்திற்கு உதவியுள்ளார். இதனையடுத்து, அந்த ஆண்டு அக்டோபரில், அவர் ஈரான் சென்றுள்ளார். 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சபித் நாசர் ஈரானில் இருந்து கேரளா வந்துள்ளார். அப்போது அவரை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் சபித் நாசரை கைது செய்துள்ளதாகவும், பணத்திற்கு உடல் உறுப்பு தானம் செய்யச் சொல்லி அவர் பலரையும் ஏமாற்றியுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சபித் நாசர் மீதான புகாரில், ஐ.பி.சி பிரிவு 370 (மனித கடத்தல்) மற்றும் மனித உறுப்புகள் மாற்றுச் சட்டத்தின் பிரிவு 19 (மனித உறுப்புகளுடன் வர்த்தகம் செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் நேற்று திங்கள்கிழமை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

“இந்த மோசடியில் எத்தனை பேர் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அவர் ஐதராபாத்தில் இருந்து ஈரானுக்கு இரண்டு நபர்களை அனுப்பி இருக்கிறார். அவர்களின் சிறுநீரகங்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பணத்திற்காக ஏங்குகிறார்கள். அவர்களுக்கு வெறும் ரூ. 5 லட்சமும், விமான டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் பணம் பெற்றவர்களிடமிருந்து பெரும் தொகையைப் பெற்றுள்ளனர். ”என்று விசாரணையை நன்கு அறிந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், "ஊதியம் பெற்று உடல் உறுப்பு தானம் செய்வது சட்டப்பூர்வமானது என நம்ப வைத்து சபித் இவர்களை ஏமாற்றியுள்ளார். அவர் இந்த மோசடியில் முக்கிய நபரா என்பதை அறிய முடியும். 

அவர் தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக கேரளா திரும்பியுள்ளார். அவர் புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் இருந்தார். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குடிவரவு அதிகாரிகள், அவரது வருகையை எச்சரித்து, அவரைத் தடுத்து நிறுத்தினர்." என்று புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Kerala Iran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment