தபால் வாக்குகளில் முறைகேடு: கேரள முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை சட்ட நடவடிக்கை எடுத்த பின்னர், சுதாகரன் கூறுகையில், "எனது பேச்சு கற்பனையுடன் கலந்தது. நான் ஒருபோதும் போலி வாக்களிக்கவில்லை அல்லது மற்றவர்களை அவ்வாறு செய்ய வைக்கவில்லை. நான் தபால் வாக்குகளைத் திறந்ததும் இல்லை" என்றார்.

தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை சட்ட நடவடிக்கை எடுத்த பின்னர், சுதாகரன் கூறுகையில், "எனது பேச்சு கற்பனையுடன் கலந்தது. நான் ஒருபோதும் போலி வாக்களிக்கவில்லை அல்லது மற்றவர்களை அவ்வாறு செய்ய வைக்கவில்லை. நான் தபால் வாக்குகளைத் திறந்ததும் இல்லை" என்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
G. Sudhakaran

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தபால் வாக்குகளில் தாம் முறைகேடு செய்ததாகக் கூறியதை அடுத்து, கேரளாவின் ஆளும் சி.பி.ஐ(எம்) கட்சியின் மூத்த தலைவரான ஜி. சுதாகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisment

 

 

Advertisment
Advertisements

கடந்த புதன்கிழமை அன்று, கேரள அரசு சாரா ஊழியர் சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசிய சுதாகரன், 1989 தேர்தலில் ஆலப்புழா தொகுதியின் சி.பி.ஐ(எம்) வேட்பாளருக்கு ஆதரவாக தபால் வாக்குகளைத் திறந்து கையாடல் செய்தது உட்பட தான் கட்சிக்குச் செய்த பல விஷயங்கள் இருப்பதாகக் கூறினார்.

இருமுறை மாநில அமைச்சராக இருந்த சுதாகரனின் இந்த பேச்சு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தீவிரமாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை போலீசாருக்கு எடுக்க உத்தரவிட்டது.

ஆலப்புழா தெற்கு போலீசார், மோசடி மற்றும் ஏமாற்றுதல் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 465, 468 மற்றும் 471 ஆகியவற்றின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகள் 135, 135ஏ, 136 மற்றும் 128 ஆகியவற்றின் கீழும் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆலப்புழா மாவட்ட ஆட்சியரும் இந்த வழக்கில் புகார்தாரராக உள்ளார்.

தனது வெளிப்பாட்டின் காரணமாக தனக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய எந்த நடவடிக்கைக்கும் தான் பயப்படவில்லை என்று சுதாகரன் கூறியிருந்தார்.

இருப்பினும், தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை சட்ட நடவடிக்கை எடுத்த பின்னர், சுதாகரன் கூறுகையில், "எனது பேச்சு கற்பனையுடன் கலந்தது. நான் ஒருபோதும் போலி வாக்களிக்கவில்லை அல்லது மற்றவர்களை அவ்வாறு செய்ய வைக்கவில்லை. நான் தபால் வாக்குகளைத் திறந்ததும் இல்லை" என்றார்.

வியாழக்கிழமை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கெல்கர் கூறுகையில், சுதாகரனின் வெளிப்பாட்டை தேர்தல் ஆணையம் "மிகவும் தீவிரமாக" பார்க்கிறது. ஆலப்புழா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு "ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்ய, வழக்குத் தொடங்க மற்றும் விரிவான விசாரணைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க" உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆலப்புழாவில் தாசில்தார் ஒருவர் சுதாகரனிடம் வாக்குமூலம் பதிவு செய்தார்.

நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த ஜி. சுதாகரன், 2006 முதல் 2011 வரை வி. எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். முதல்வர் பினராயி விஜயனின் முந்தைய அமைச்சரவையிலும் அவர் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: