முன்னணி மலையாள நாளேடான மத்ருபூமியின் நிர்வாக இயக்குநரும், பி.டி.ஐ இயக்குநர்கள் குழுவின் உறுப்பினருமான எம் பி வீரேந்திர குமார், கார்டியாக் அரெஸ்ட் காரணமாக வியாழக்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
Rasi Palan 29th May 2020: இன்றைய ராசிபலன்
கேரளாவைச் சேர்ந்த இவர், மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். இவருக்கு வயது 84.
உடல்நலக் கோளாறுகள் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், துரதிர்ஷ்டவசமாக அவர் இரவு 11 மணிக்கு காலமாகிவிட்டதாக, பி.டி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. வீரேந்திர குமாருக்கு மனைவி, மூன்று மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகன், எம் வி ஸ்ரேயாம் குமார், மத்ருபூமியின் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார்.
வீரேந்திர குமார் 1987-ல் கேரள சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018 மார்ச் மாதம் கேரளாவிலில் தனி இடத்திற்காக நடைபெற்ற தேர்தலில், இடதுசாரி ஜனநாயக முன்னணியின் சுதந்திர வேட்பாளர் வீரேந்திர குமார் மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது இறுதி சடங்குகள் நாளை வயநாட்டில் நடைபெறும்.
மாதம் ரூ9250 வரை பென்ஷன்! எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா?
வீரேந்திர குமார் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக மூன்று முறை பணியாற்றினார். அவர் இறக்கும் போது செய்தி நிறுவனத்தின் குழுவில் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”