/tamil-ie/media/media_files/uploads/2022/08/NEET-1-1.jpeg)
Kerala: Girls forced to remove inner wear get another chance to write NEET exam: ஜூலை 17-ம் தேதி நடந்த நீட் தேர்வின்போது கேரளாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்கு முன், உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வை நடத்துகிறது.
கொல்லத்தில் உள்ள ஆயூரில் உள்ள மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் தேர்வெழுதிய மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை மறுதேர்வு குறித்து தகவல் அனுப்பியுள்ளது. மறுதேர்வு கொல்லத்தில் உள்ள எஸ்.என் பப்ளிக் பள்ளியில் நடைபெறும். ஜூலை 17 ஆம் தேதி ஆயூர் தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்ட ஏராளமான மாணவிகள், NTA-வால் மாணவிகளை சோதனை செய்ய பணியமர்த்தப்பட்ட பெண்கள், உலோகக் கொக்கிகள் கொண்ட தங்கள் உள்ளாடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தியதால் அவமானப்படுத்தப்பட்டனர்.
இதையும் படியுங்கள்: முனாவர் ஃபரூக்கி நிகழ்ச்சிக்கு வி.ஹெச்.பி எதிர்ப்பு; அனுமதியை ரத்து செய்த டெல்லி போலீஸ்
இந்த சம்பவம் குறித்து சில மாணவிகள் போலீசில் புகார் அளித்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவிகளை சோதனை செய்த பெண்கள் மற்றும் நீட் ஒருங்கிணைப்பாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விஷயத்தை காவல்துறையிடம் எடுத்துச் சென்ற பெற்றோரில் ஒருவரான சி.கோபகுமார், செப்டம்பர் 4 ஆம் தேதி மறுதேர்வு நடத்துவது தொடர்பாக தனது மகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதே மையத்தில் தேர்வெழுதிய பல மாணவிகளுக்கும் மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டும் என்பது கட்டாயமில்லை. இது ஒரு விருப்பம் மட்டுமே, என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.