கேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்!

அவரால் உருவான குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் தூக்கி எறிந்துள்ளார்.

CPM office : கேரளாவில் இளம்பெண் ஒருவர், விழாவிற்கு சென்ற போது கட்சி அலுவலகத்தில் வைத்து தொண்டர் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு செர்புளசேரி பகுதியில் இருக்கும் பிரதான சாலை ஒன்றில் கடந்த 16 ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது இளம் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிவீசி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த பெண்ணின் பெயர் தாரா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 21 வயதாகும் இவர் 10 மாதங்களுக்கு முன்பு கல்லூரி விழா அழைப்பிற்காக செர்புளசேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் சென்றிருக்கிறார். அப்போது அவரை அதே கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கற்பழித்து விட்டதாகவும், அவரால் உருவான குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் தூக்கி எறிந்ததாக தாரா காவலர்களிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணையும், குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கட்சி தொண்டரை தேடி வருகின்றனர்.

தலைமறைவான நபர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவில் உறுப்பினராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கேரளா ஊடகங்களில் தீயாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close