Advertisment

கேரளா: 9 பல்கலை. துணை வேந்தர்கள் பதவியில் தொடர அனுமதி.. கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திங்களன்று, பதவியில் நீடிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமைக்கான காரணத்தைக் காட்டுமாறு 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார்.

author-image
WebDesk
New Update
Kerala

கவர்னர் ஆரிப் முகம்மது கான்

திங்களன்று கேரள உயர் நீதிமன்றம், வேந்தர் என்ற முறையில் ஆளுநர் இறுதி முடிவு எடுக்கும் வரை, மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை பதவியில் தொடர அனுமதித்து உத்தரவிட்டது.

Advertisment

பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, கேரளத்தில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட 9 பல்கலைக் கழக துணைவேந்தர்களையும் அக். 24 ஆம் தேதிக்குள் பதவி விலகுமாறு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் திங்களன்று, பதவியில் நீடிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமைக்கான காரணத்தைக் காட்டுமாறு 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார். நவம்பர் 3-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதற்கிடையில், இந்த உத்தரவினை எதிர்த்து துணைவேந்தர்கள் கேரளா உயர் நீதிமன்றத்தை நாடினர். உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு, திங்கள் கிழமை மாலை இந்த மனுவினை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது இயற்கை நீதி மறுக்கப்படுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், பதவியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது. அனைத்து துணைவேந்தர்களுக்கும், ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியதால், அவர்களை ராஜினாமா செய்யுமாறு கோரிய முந்தைய கடிதத்தின் பொருத்தம் இல்லாமல் போய்விட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்நிலையில், ஆளுநரின் இந்த செயல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘ஒன்பது துணைவேந்தர்களின் நியமனம் சட்டவிரோதமானது என்று ஆளுநர் கண்டறிந்தால், அதற்கு அவர்தான் பொறுப்பு. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரி ஆளுநர் தான். ஒருவேளை நியமனங்கள் சட்டவிரோதமானதாக இருந்தால் அதற்கு அவர்தான் பொறுப்பு.

ஆளுநர் அல்லது துணைவேந்தர்கள்- யார் விலக வேண்டும் என்பதை ஆளுநர் சிந்திக்கட்டும். சங்பரிவார்களின் விருப்பப்படி ஆளுநர் செயல்படுகிறார். அவர் அழிக்கும் மனநிலையுடன் செயல்படுகிறார்” என்றார்.

ஆளுநர் அலுவலகம் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல என்றார் விஜயன். ஆரிஃப்கான், ஆளுநர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்துகிறார். இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் சாரத்திற்கு எதிரானது.

துணை வேந்தர்களுக்கு அவர் வழங்கிய உத்தரவு, பல்கலைக்கழகங்களின் கல்வி சுதந்திரம் மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்களை மீறுவதாகும். உங்களிடம் இல்லாத அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்த முடியும் என்று நினைக்காதீர்கள். இது உத்திரத்தை தாங்குவதாக நினைக்கும் பல்லியின் முட்டாள்தனத்திற்கு ஒப்பானது. காலனித்துவ காலத்தின் எச்சமாக இருக்கும் ஆளுநரின் அதிகார வரம்புகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

நவம்பர் 15 அன்று ராஜ்பவன் முன் எல்.டி.எஃப் நடத்திய போராட்டத்தை குறிப்பிட்டு விஜயன் எச்சரித்தார், “அரசியலமைப்புக்கு பொருந்தாத செயல்கள் செய்யப்படும்போது, ​​எதிர்ப்புகள் வெளிப்படும். அதை எதிர்கொள்ள வேண்டும்.

பின்னர் பாலக்காட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயன்: ஆளுநரின் அதிகாரம் மற்றும் உரிமைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அந்த வரம்பைத் தாண்டி ஒரு அங்குலத்தைக் கடக்க முடியும் என்று நினைக்காதீர்கள் என்றார்.

இதற்கிடையில், கான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகவும் தெளிவானது என்றும் அதன் வரம்பிலிருந்து யாருக்கும் விலக்கு அளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

வி-சிக்கள் ராஜினாமா செய்ய மறுத்ததால், நோட்டீஸ் அனுப்பியதாக அவர் கூறினார்.

அவர்களுக்கு கண்ணியமான முறையில் பதவியை விட்டு வெளியேறும் வாய்ப்பை வழங்கியுள்ளேன். அவர்கள் வேந்தரின் பேச்சைக் கேட்பதில்லை. அவர்கள் எல்.டி.எப் கூறுவதை கேட்கின்றனர். கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றனர், என்றார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வி-சி நியமனம் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளை மீறியதால், "சட்டவிரோதமானது” என்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் கூறியது.

APJ அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விசி ஆக ராஜஸ்ரீ MS ஐ நியமிக்க பரிந்துரைத்த தேர்வு குழு "முறையாக அமைக்கப்படவில்லை" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

பல்கலைக்கழக சட்டம், 2015 இன் பிரிவு 13(4) இன் படி, தேர்வு குழு ஒருமனதாக மூன்று தகுதியான நபர்களை பரிந்துரைக்கும். ஆனால், இந்த வழக்கில், குழு ராஜஸ்ரீயின் பெயரை மட்டுமே பரிந்துரைத்தது என்று அது குறிப்பிட்டது.

ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைத் தவிர, கேரளப் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள் பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம், ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகம் ஆகிய 8 துணை வேந்தர்களையும் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment