/tamil-ie/media/media_files/uploads/2022/09/Kerala-onam.png)
கேரள ஓணம் பம்பர் பரிசு அறிவிப்பு
கேரளத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஓணம் லாட்டரி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.18) வெளியாகின.
இதில் TJ 750605 என்ற எண்ணுக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. இந்த லாட்டரி பழவங்காடி பகவதி ஏஜென்சி மூலம் விற்பனையாகியுள்ளது.
இந்த லாட்டரி சீட்டை தங்க ராஜ் என்பவர் வாங்கியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் பரிசான ரூ.25 கோடியில் வருமான பிடித்தம் மற்றும் இதர பிடித்தங்கள் காரணமா ரூ.15.75 கோடி வழங்கப்படும்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் முதல் பரிசு வென்ற லாட்டரியை சம்பந்தப்பட்ட நபர் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வாங்கியுள்ளார்.
மேலும், TG 270912 என்ற எண்ணுக்கு இரண்டாம் பரிசு விழுந்துள்ளது. கோட்டயம் மீனாட்சி லாட்டரி ஏஜென்சி மூலம் விற்பனை செய்யப்பட்ட இந்த லாட்டரி சீட்டை பாப்பன் என்பவர் பெற்றுள்ளார்.
அடுத்து 10 நபர்களுக்கு மூன்றாவது பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. அந்த எண்கள் TA 292922, TB 479040, TC 204579, TD 545669, TE 115479, TG 571986, TH 562506, TJ 384189, TK 395507,TL 555868 ஆகும்.
4ஆவது பரிசாக ரூ.1 லட்சம் வீதம் 90 நபர்களுக்கு வழங்கப்படும். அடுத்து 72 ஆயிரம் பேருக்கு 5 ஆவது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
ஓணம் ஸ்பெஷல் லாட்டரி டிக்கெட் கடந்தாண்டு 65 லட்சம் விற்பனையாகி இருந்தது. தற்போது அது 66.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். இதன்மூலம் அரசு ரூ.270 கோடி திரட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.