தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை படு பயங்கராமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா அல்லது இதர வேலையாக கேரளா செல்பவர்கள் அங்கிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒரு சிலருக்கு லட்சகணக்கில் பரிசுத்தொகையும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் தற்போது ஒணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த பண்டிகைக்காக ரூ25 கோடி மதிப்புள்ள, பரிசுத்தொகை கொண்ட, லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க, கேரளா மக்கள் போட்டியிட்டு வருகின்றனர். இதற்காக 40 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் அரசாங்கமே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வரும நிலையில், தினமும் அங்கு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இதில் ரூ40 மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ75 லட்சம் பரிசுத்தொகை கொண்டது. அதேபோல் வருடத்திற்கு 6 பம்பர் குலுக்கல் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த பம்பர் டிக்கெட்டுகள் கேரளா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் பம்பர் லாட்டரி, டிக்கெட் பரிசுத்தொகை ரூ25 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகையின் டிக்கெட் விலை ரூ500 ஆகும். 90 லட்சம் டிக்கெட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்ட நிலையில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 9-ந் தேதி இந்த லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெறும்.
இந்த பம்பர் குலுக்கலில், முதல் பரிசு ரூ25 கோடியும், 2-வது பரிசாக 20 பெருக்கு தலா ஒரு கோடியும், 3-வது பரிசாக 20 பேருக்கு தலா ரூ50 லட்சமும், கிடைக்கும். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தது.
இதனிடையே ரூ25 கோடி பரிசுத்தொகை்கான கேரளா லாட்டரி டிக்கெட்டை வாங்கியவர்களில் பாலக்காடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 6,59,240 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. தலைநகர் திருவனந்தபுரம் இந்த பட்டியலில், 2-வது இடத்தில் உள்ளது. இங்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 470 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. மூன்றாவது இடத்தில் உள்ள திரிசூரில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 450 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“