ஆன்லைனின் கடன் கொடுத்து மோசடி: கேரளாவை சேர்ந்தவர் புதுச்சேரியில் கைது!

கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுத்தும் அவர்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, நண்பர்கள் உறவினர்கள் அனுப்பி விடுவேன் என மிரட்டி 465 கோடி ரூபாய்க்கு மேல் பயணம்பறித்துள்ளனர்.

கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுத்தும் அவர்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, நண்பர்கள் உறவினர்கள் அனுப்பி விடுவேன் என மிரட்டி 465 கோடி ரூபாய்க்கு மேல் பயணம்பறித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Police Putuch

குறைந்த வட்டி உடனடியாக கடன் என்ற ஆப் மூலம் இந்தியா முழுவதும் 465 கோடி கொள்ளை அடித்த கேரளாவை சேர்ந்த நபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சுற்றிவலைத்து பிடித்த நிலையில், அவர்களின் வங்கிக்கணக்கு முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான பொதுமக்களை உடனடி கடன் செயலி (instant loan app) மூலம் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் உடனடியாக 2000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் கொடுத்து அவர்கள் வாங்கிய கடன் மற்றும் வட்டித் தொகையை விட பல மடங்கு பணம் வசூலித்துள்ளனர். அதன் பிறகும் கடன் வாங்கியவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவர்களுடைய நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என  மிரட்டி 465 கோடி ரூபாய்க்கு மேல் பயணம்பறித்துள்ளனர்.

இந்த வழக்கில் கேரளா மலப்புரம் மாவட்டச் சேர்ந்த முகமது ஷரீப் 42 வயது  என்பவரை புதுச்சேரி  சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையிலான தலைமை காவலர் மணிமொழி பாலாஜி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் உள்ள இணைய வழி மோசடி கும்பலுக்கும் இந்த மோசடி கும்பலுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளை அடித்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மிக எளிதாக வெளிநாடுகளுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

ஆன்லைன் கேமில் பணம் ஜெயிப்பவர்களுக்கு இணைய வழி மோசடியில் வந்த பணத்தை  அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்து மக்களை மிரட்டி சம்பாதித்த பணம் 465 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதால் மத்திய அமலாக்க (enforcement directory) துறையும் இது சம்பந்தமான தகவல்களை புதுச்சேரி காவல்துறையிடம் இருந்து கேட்டு பெற்று அவர்களும் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த மோசடி கும்பலிடம் இருந்து 331 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

கைது செய்யப்பட்ட நபரிடம் பெற்ற வாக்குமூலத்தின் படி இன்னும் பல்வேறு நபர்கள் இதில் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது ஆகவே இது சம்பந்தமான விசாரணையை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா IPS மற்றும் இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்க புதுச்சேரி காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்த மிகப்பெரிய டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளதால் அதைப்பற்றி விசாரிக்க புதுச்சேரி இணைய வழி போலீசார் கேரளா சென்றுள்ளனர். SSP அறிவுறுத்தலின்படி அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் வெளிநாட்டுக்கு சென்றவர்களின் விவரங்கள் அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளிநாட்டுக்கு எவ்வளவுநபர்கள் சென்றுள்ளனர் வெளிநாட்டில் எத்தனை கிளைகள் அந்த நிறுவனத்துக்கு உள்ளது போன்ற பல்வேறு தகவல் திரட்ட தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்

Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: