கேரளாவின் கொச்சி நகரில் நடைபெற்று வரும் கொச்சி கார்னிவல் விழாவில், அரசியல் சாசனப் பதவிகளில் இருப்பவர்களை அவமதித்ததாக பாஜக கூறியதை அடுத்து, வெள்ளிக்கிழமை நாடகம் நடத்துவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.
கவர்னரும் தொப்பியும் என்ற நாடகம், 1804 ஆம் ஆண்டு ஃபிரெட்ரிக் ஷில்லர் எழுதிய 'வில்லியம் டெல்' என்ற ஜெர்மன் நாடகத்தின் மலையாளத் தழுவலாகும், இது வெள்ளிக்கிழமை இரவு அரங்கேற்ற திட்டமிடப்பட்டது.
இந்த நாடகம் ஒரு மாநிலத்தின் சர்வாதிகார கவர்னரை சித்தரிக்கிறது, அவர் நகரத்தில் ஒரு தொப்பியை வைத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்கள் அதை வணங்கும்படி கட்டளையிடுவார்.
இதனிடையே சில மணி நேரங்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், நாடகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் அதன் எந்த உரையாடலிலும் “கவர்னர்” என்று குறிப்பிடக்கூடாது என்றும் ஃபோர்ட் கொச்சி சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் மீரா, கார்னிவல் ஏற்பாட்டாளர்களிடம் கூறினார்.
நாடகத்தில் மாநில அல்லது மத்திய அரசில் அரசியலமைப்பு பதவி வகிக்கும் யாரையும் இமிடேட் செய்யவோ அல்லது உதராணமாகவோ காட்டக் கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பாஜக மட்டஞ்சேரி மண்டலக் குழுத் தலைவர் சிவக்குமார் காமத் புகார் அளித்தார்.
ஃபோர்ட் கொச்சியில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் கார்னிவலின் அமைப்பாளர்களான NATAK (Network of Artistic Theatre Activists Kerala), திட்டமிட்டபடி நாடகத்தை அரங்கேற்றவில்லை.
இருப்பினும், இந்த தடையை "கருத்துச் சுதந்திரத்தின் மீதான மீறல்" என்று கூறிய NATAK மாநிலக் குழு உறுப்பினர் ஷாபு மாதவன், நாடகத்திற்கும் மாநில ஆளுநருக்கும் (ஆரிப் முகமது கான்) எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் நாடகத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கவில்லை. ஆளுநருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நாடகத்தின் தலைப்பை பாஜக தவறாகப் புரிந்து கொண்டதால் புகார் அளித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக நாட்டாக் மாநிலக் குழு சனிக்கிழமை கூடுகிறது. நாடகத்தையோ அதன் அரங்கேற்றத்தையோ கைவிடும் திட்டம் எங்களிடம் இல்லை, என்றார்.
Read in English: Kerala play with ‘Governor’ in title banned after BJP complaint
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“