Advertisment

சபரிமலை போராட்டம் நடத்திய 1400 பேர் கைது... கேரளா போலீஸ் அதிரடி நடவடிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sabarimala 1400 arrested, 1400 பேர் கைது

sabarimala 1400 arrested, 1400 பேர் கைது

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் வன்முறையில் சம்பவத்தில் ஈடுபட்ட 1400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் வழிபாட்டிற்கு வரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின்படி, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் வர முயற்சி செய்தனர்.

1400 பேர் கைது

பெண்களின் வருகைக்கு எதிராக சபரிமலையில் போராட்டமும் வன்முறையும் வெடித்தது. இந்த போராட்டத்தில் வாகனங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரும் தாக்கப்பட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதாக சபரிமலை, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் 1400 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பினராய் விஜயன் காவல்துறை உயரதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Kerala Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment