Advertisment

கொச்சி குண்டுவெடிப்பு 'கமெண்ட்': மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

மத்திய அமைச்சர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 (கலவரத்தைத் தூண்டுதல்) மற்றும் 153 ஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala police book Union minister Rajeev Chandrasekhar

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அக்டோபர் 30, 2023 திங்கட்கிழமை, கொச்சியில் உள்ள களமசேரி சாம்ரா கன்வென்ஷன் சென்டரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார்.

Union minister Rajeev Chandrasekhar | Kochi blasts | கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த யெகோவாவின் சாட்சிகள் ஜெபக் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததாக பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி போலீசார் செவ்வாய்க்கிழமை (அக்.31) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 (கலவரத்தைத் தூண்டுதல்) மற்றும் 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

kerala blasts

மேலும். கேரள போலீஸ் சட்டத்தின் பிரிவு 120 (o) இன் கீழ், தொல்லை ஏற்படுத்துதல் மற்றும் பொது ஒழுங்கை மீறுதல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கொச்சி நகர காவல்துறையின் சைபர் செல் புகாரைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்திரசேகர் 'பாலஸ்தீன பயங்கரவாதக் குழு ஹமாஸ்' போன்ற பயங்கரவாதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Kerala police book Union minister Rajeev Chandrasekhar for comments on Kochi blasts

மேலும் அவர் ஃபேஸ்புக்கில், “காங்கிரஸ் மற்றும் சிபிஎம்மின் திருப்தி அரசியலின் விலை எல்லா சமூகத்தைச் சேர்ந்த அப்பாவிகளால் எப்போதும் சுமக்கப்படும் என வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

இது, வெட்கக்கேடான சமாதான அரசியல். உங்கள் வீட்டு முற்றத்தில் பாம்புகளை வைத்தால் அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டும் கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களுக்குத் தெரியும், இறுதியில் அந்த பாம்புகள் கொல்லைப்புறத்தில் உள்ளவர்களைத் தாக்கப் போகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Kerala blast.jpg

கேரள யெகோவா ஜெபக் கூட்டத்தில் டொமினிக் மார்டின் என்பவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த குண்டுவெடிப்பில் சிறுமி உள்பட 3 பெண்கள் உயிரிழந்தனர்.

60க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். இதில் 18 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருந்தது. தற்போது அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment