கடவுளின் தேசத்தை புரட்டிப்போட்ட மழை – மக்களின் இயல்புவாழ்க்கை கடும் பாதிப்பு

Kerala flood : மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரழிவிலிருந்து மீளும் பொருட்டு, கேரள அரசு, மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது.

rainfall, kerala, thrissur, wayanad, ernakulam, flood, cochin, kozhikode, கேரளா, வயநாடு, எர்ணாகுளம், வெள்ளம், கொச்சி, கோழிக்கோடு
rainfall, kerala, thrissur, wayanad, ernakulam, flood, cochin, kozhikode, கேரளா, வயநாடு, எர்ணாகுளம், வெள்ளம், கொச்சி, கோழிக்கோடு

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையில் சிக்கி இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும், அதிக வெள்ளத்தின் காரணமாக பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால், மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரழிவிலிருந்து மீளும் பொருட்டு, கேரள அரசு, மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதிகளில் அதிகமழை பெய்துவருவதால், இப்பகுதிகளில் சிக்கியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பான வீடியோக்கள், சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றன. அதிலிருந்து சில வீடியோக்களை இங்கு காணலாம்.

கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் தேங்கியுள்ள மழைநீர். மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக, வரும் 11ம் தேதி பிற்பகல் 3 மணிவரை விமானபோக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கொச்சி விமானநிலைய ரன்வே…

வயநாடு பகுதியில் தான் அதிகளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாட்டின் மேப்பாடி பகுதியில் ஆக்ரோசமாக பாயும் மழைநீர். இப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 50 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கல்பேட்டா பகுதியில், வீடு இடிந்துவிழும் காட்சி. இந்த நிகழ்வின்போது வீட்டினுள் யாரும் இல்லை.

கோழிக்கோடு மாவட்டத்தின் கோடன்சேரி பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ…

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala rains watch glimpses of flood havoc

Next Story
அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி – மோடி, அமித் ஷா உடல்நலம் விசாரிப்புarun jaitley, aiims hospital, PM Modi, delhi aiims hospital, அருண் ஜெட்லி, எய்ம்ஸ் மருத்துவமனை, பிரதமர் மோடி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express