எலிக் காய்ச்சல் கேரளாவில் 12 பேர் பலி - kerala rat fever 12 people died | Indian Express Tamil

கேரளாவிற்கு வந்த அடுத்த சோதனை: பரவும் எலிக் காய்ச்சலால் 12 பேர் பலி!

இன்று ஒரே நாளில் இருவர் எலிக்காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

கேரளாவிற்கு வந்த அடுத்த சோதனை: பரவும் எலிக் காய்ச்சலால் 12 பேர் பலி!
எலிக் காய்ச்சல்

கேரளாவை எலிக்காய்ச்சல் மிரட்டி வருகிறது. இதுவரை 12 பேர் பலியாகி இருப்பதால் பொதுமக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் எலிக் காய்ச்சல்:

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா மாநிலம் சமீப காலமாக பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு பெய்த வரலாறு காணாத மழையால் மொத்த மாநிலமும் நிலைகுலைந்தது. இந்த இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் கேரளாவை தற்போது எலிக் காய்ச்சல் மிரட்டி வருகிறது.

வேகமாகப் பரவும் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், கேரள அரசு அந்த மாவட்டங்களில் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

மழையின் பாதிப்புக் குறைவாக இருந்த கோழிக்கோடு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 4 லட்சம் பேருக்குத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறையினர் திகைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இருவர் எலிக்காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் இதுவரை 12 பேர் எலிக்காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். அதனால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kerala rat fever 12 people died