கேரள மழை வெள்ள அபாய எச்சரிக்கை : கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பொழிந்த கனமழை காரணமாக மாநிலத்தில் இருந்த அனைத்து மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆசியாவின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி சிறுதொணி அணை நிரம்பியதால் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கடுத்து ஓடியது.
மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வரும் இந்நிலையில் மீண்டும் கேரளாவில் பருவமழை தொடங்கியது. மேலும் படிக்க : இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு
வானிலை ஆய்வு மையம் இனி வரும் 45 நாட்களுக்கு கேரளாவில் மழை இருக்கும் என்று கூறியுள்ளது. தற்போது இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 3,4,5, மற்றும் 6 தேதிகளில் 7 - 11 செமீ முதல் 12-20 செமீ வரை மழை பதிவாகும் என்று கூறியிருந்தது. தற்போது வருகின்ற 7ம் தேதி இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
கேரள மழை வெள்ள அபாய எச்சரிக்கை
கேரள முதல்வர் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார். அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. மேலும் வடகிழக்கு கடலோரம் நகர்வதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட காரணத்தால் மத்திய அரசின் உதவியை நாடியிருக்கிறது கேரள அரசு. இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் செப்டம்பர் 26ம் தேதி மஞ்சள் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. செப்டம்பர் 27ம் தேதி பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாக்குளம், இடுக்கி, மற்றும் பாலக்காடு பகுதிகளில் எச்சரிக்கை விடப்பட்டது.
மூணார் பகுதிகளுக்கு நீலக்குறிஞ்சி மலர்களை பார்க்க சுற்றுலாவினரை அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திக் கொண்டார்.