நெருங்கும் ஓணம்; உச்சம் தொடும் கொரோனா: கேரளாவில் ஒரே நாளில் 21,000 பேர் பாதிப்பு

செவ்வாய்க் கிழமை அன்று கேரளாவில் மட்டும் 21 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 28,204 தான்.

Kerala reports 21000 fresh Covid cases

Shaju Philip

Kerala reports 21,000 fresh Covid cases : கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக தேசிய அளவில் கொரோனா தொற்று விகிதம் 2% ஆக இருக்கின்ற நிலையில், கேரளாவில் செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா தொற்று விகிதம் (TRP) 15.91% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் 11% ஆக தொற்று விகிதம் இருந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விதிகளை தளர்த்தி அறிவித்தது கேரளா அரசு. கடந்த வாரத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு கேரளாவில் 5 இலக்கங்களில் தொற்று நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

செவ்வாய்க் கிழமை அன்று கேரளாவில் மட்டும் 21 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 28,204 தான். அதே போன்று கேரளாவில் 1.71 லட்சம் பேர் கொரோனாவுக்கு கேரளாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் மொத்தமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை 3.88 லட்சமாகும்.

கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தால் வியாழக்கிழமை முதல் மீண்டும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, பஞ்சாயத்து/நகர்ப்புற வார்டுகள் 10 க்கும் மேற்பட்ட வாராந்திர தொற்று மக்கள் தொகை விகிதம் (WIPR) கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. வழக்குகள் இன்னும் அதிகமாக இருப்பதால், WIPR 8 க்கு மேல் உள்ள அனைத்து இடங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்கள் கட்டுப்பாடுகளுக்கு கீழ் கொண்டு வரப்படும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்ட மேலாண்மை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala reports 21000 fresh covid cases tpr nearly 16 per cent

Next Story
வேட்பாளர்களின் குற்ற வழக்குகளை வெளியிடாத 8 கட்சிகளுக்கு அபராதம் – உச்ச நீதிமன்றம் உத்தரவுSupreme Court fines 8 political parties, non-disclosure of criminal cases of candidates, BJP, பீகார் தேர்தல், வேட்பாளர்களின் குற்ற வழக்குகளை வெளியிடாத 8 அரசியல் கட்சிகளுக்கு அபராதம், உச்ச நீதிமன்றம், பாஜக, காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐ, சிபிஎம், Congress, RJD, JDU, CPI, Lok Jan Shakti Party, were fined Rs 1 lakh for partial non-compliance, Communist Party of India Marxist, Nationalist Congress Party, NCP, supreme court, bihar elections
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com