‘பூஸ்டர் டோஸ், குழந்தைகளுக்கு தடுப்பூசி’ சீக்கிரம் முடிவெடுக்க மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை

கேரளாவில் தான் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாட்டிலே அதிகளவில் உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கைகளான இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் வழங்குதல், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ் இடைவெளியை குறைப்பது போன்ற செயல்களை விரைவுபடுத்த மத்திய அரசுக்கு, கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முடிவை விரைவாக எடுத்திட வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதே போல், கோவிஷீல்டு இரண்டு டோஸ் தடுப்பூசிக்கான இடைவெளியை குறைக்க வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

மே 13 ஆம் தேதி, மத்திய அரசு கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் இடைவெளியை 6 – 8 வாரத்திலிருந்து 12 – 16 வாரமாக அல்லது 84 நாள்கள் என உயர்த்தியது. இந்த முடிவுக்கு என்ஆர்ஐ மக்கள், எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய அவர், ” கேரளாவில் என்ஆர்ஐ மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள், கேரளாவில் முதல் டோஸ் எடுத்துக்கொண்டால், இரண்டாம் டோஸ் எடுப்பதில் மிகப்பெரிய இடைவெளியால் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, மத்திய அரசை இடைவெளியை குறைக்க வலியுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக பரிசீலிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால், ஜூன் 7 அன்று, கல்வி அல்லது வேலை வாய்ப்புகளுக்காக சர்வதேச பயணத்தை மேற்கொள்ளும் நபர்களுக்கு 84 நாள்கள் விதியில் மத்திய அரசு விதிவிலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய அவர், “பூஸ்டர் டோஸ் குறித்தும் விரைவாக முடிவெடுக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் எங்கள் மாநிலத்தில் அதிகளவில் வசிக்கின்றனர். பகுப்பாய்வு செய்ததில், இத்தகைய பாதிப்பு இருப்பவர்களுக்கு அதிகளவில் மரணங்கள் ஏற்படுகின்றன. எனவே, இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸ் கொடுப்பதற்கான முடிவை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

தற்சமயம், கேரளாவில் தான் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாட்டிலே அதிகளவில் பதிவாகுகிறது. சுமார் 70,251 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala request centre to make decision on booster dose and child vaccination

Next Story
இந்துத்துவா – இந்து மதம் இரண்டும் வெவ்வேறு கருத்துகள்: ராகுல் காந்தி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express