சபரிமலை விவகாரம் : தீர்ப்பிற்கு எதிராக கருத்து இருந்தால் தலைமை தந்திரி பொறுப்பில் இருந்து விலகுங்கள் - பினராயி

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு வந்த பின்பு ஐந்தாவது முறையாக இந்து அமைப்பினர் முழு அடைப்பிற்கு அழைப்பு

Kerala Sabarimala hartal LIVE updates : கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு ஆண்டாடு காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வருடம் செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்று, போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை, கேரளா மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டினை சேர்ந்த இரண்டு பெண்கள் பிந்து மற்றும் கனகதுர்கா சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து கோவிலின் நடை பரிகார பூஜைக்காக சுமார் 1 மணி நேரம் மூடப்பட்டிருந்தது.  பின்பு கோவில் ஆச்சாரம் மீறப்பட்டதை தொடர்ந்து கேரளாவில் ஆங்காங்கே போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் வெடித்தன.

மேலும் படிக்க : சபரிமலையில் பெண்கள்… அதிகாலை 03:45க்கு ஐயப்ப தரிசனம்

Kerala Sabarimala hartal LIVE updates

03:30 PM : பாலக்காடு சிபிஎம் அலுவலகம் தாக்குதல்

பாலக்காடு பகுதியில் அமைந்திருக்கும் சி.பி.எம். கட்சி அலுவலகம் போராட்டக்காரர்களால் பலத்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. போராட்டம் தீவிரமடைந்ததால் கண்ணீர் புகைகுண்டு வீசி போராட்டம் கலைக்கப்பட்டுள்ளது.

03:00 PM : தலைமை தந்திரிக்கு எச்சரிக்கை

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்றால் வேலையைவிட்டுச் செல்லலாம் – தலைமை தந்திரியை எச்சரிக்கை செய்த பினராயி விஜயன். நேற்று அதிகாலையில் பெண்கள் கோவிலுக்கு சென்று வந்த பின்பு, பரிகார பூஜை செய்தனர். ஆனால் இது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்றும், நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக தந்திரி ஏதேனும் கருத்துகள் வைத்திருந்தால் தாரளமாக அந்த பொறுப்பில் இருந்து வெளியேறலாம் என்று கூறியிருக்கிறார்.

02:30 PM : புற்றுநோய் சிகிச்சைக்காக வந்த பெண் மரணம்

திருவனன்ந்தபுரத்தில் இருக்கும்  ரீஜினல் கேனசர் செண்டரில் சிகிச்சை பெற்று வந்தவர் வயநாடை சேர்ந்த பத்தும்மா என்ற 64 வயது பெண். இன்று சிகிச்சைக்காக திருவனந்தபுரம் வந்த அப்பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல், ரயில்வே ஸ்டேசனிலேயே உயிரிழந்துவிட்டார்.

12:30 PM : சேதாரமான அரசு உடமைகள்

ஏற்கனவே 7 காவல்த்துறை வாகனங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. அது மட்டும் 79 கேரள அரசு பேருந்துகளும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.

12:00 PM : பினராயி விஜயன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை

இந்து அமைப்பினரால் ஏற்பட்ட சேதாரங்கள் எவ்வளவு என்பது அனைவருக்கும் தெரியும்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். அப்போது, பாஜகவினரால் நடத்தப்படும் ஐந்தாவது போராட்டம் இதுவாகும். தற்போது மாநிலமெங்கும் நடைபெற்று வரும் வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் வன்முறைகளாகும்.

சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இரண்டு பெண்கள் கோரிக்கை வைத்தனர். மற்ற பெண்களுக்கு வழங்கப்படும் அதே பாதுகாப்பினை தான் நாங்கள் அந்த பெண்களுக்கும் வழங்கினோம்.  உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அரசு அந்த தீர்ப்பினை அமலுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறியுள்ளார்.

11:00 AM : பினராயி விஜயனுக்கு எதிராக கோசம்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், கோசங்களை எழுப்பி வருகின்றனர். கேரளா திருச்சூரில் நடைபெற்று வரும் போராட்டத்தின் வீடியோ காட்சிகள்

10:50 AM : விடுதலை சிறுத்தை  கட்சிகள் பாராட்டு ‘

பிந்து மற்றும் கனகதுர்காவிற்கு வாழ்த்துகள் தெரிவித்தும், வழிபாட்டு தலங்களில் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்திய கேரள அரசிற்கு வாழ்த்துகள் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன்.

10:45 AM : தமிழகத்திலும் தொடரும் போராட்டங்கள்

பெண்களின் தரிசனத்தை தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் கேரள சுற்றுலாத்துறை அரசு விடுதிகளில் மர்ம நபர்கள் கல்வீச்சு. பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காஞ்சிபுர மாவட்டம் பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க : சபரிமலையில் பெண்கள் தரிசனம் எதிரொலி… தமிழகத்தில் போராட்டம்

10:30 AM : காவல் துறை உதவியுடன் பேருந்துகள் இயக்கம்

கேரளா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அரசு பேருந்துகள் அனைத்தும் காவல் துறையினர் உதவியுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

10:00 AM : பாஜக தொண்டர் மரணம்  – இருவர் கைது

சந்திரன் மரணத்தை தொடர்ந்து 2 சிபிஎம் உறுப்பினர்கள் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

09:50 AM : பல்வேறு மாவட்டங்களில் வெடித்த கலவரம்

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.  கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக அளவு பிரச்சனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

09:40 AM : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக தலைவர்கள் கைது

வயநாடு மாவட்டத்தில் இருக்கும் 8 பாஜக தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 50ற்கும் மேற்பட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

09:30 AM : நூலகம் எரிப்பு

பாலக்காடு பகுதியில் இருக்கும் இ.எம்.எஸ் நூலகம் எரிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பினையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

09:20 AM : எல்லைப் பகுதிகளில் பேருந்து நிறுத்தம்

சபரிமலையில் பெண்கள் வழிபாட்டினைத் தொடர்ந்து கேரளா மட்டுமல்லாமல், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் அப்பெண்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. இன்று முழு அடைப்பு காரணமாக தமிழகம் மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் இரு மாநிலங்களுக்குமான எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

வெளியூர்களில் இருந்து ரயில் மூலமாக திருவனந்தபுரம் வரும் பயணிகளை காவல்துறையினர் தங்களின் வாகனங்களில் வைத்து பாதுகாப்பாக அழைத்து சென்று கொண்டுள்ளனர்.

09:15 AM : களையிழந்து இருக்கும் திருவனந்தபுரம்

09:00 AM : ஐந்தாவது முறையாக முழு கடையடைப்பு போராட்டம்

நிலக்கல் பகுதியில் ஐயப்ப பக்தர் ஒருவர் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 2ம் தேதி அன்றி பத்தினம்திட்டா மாவட்டத்தில் 12 மணி நேர அடைப்பு அறிவிக்கப்பட்டது.

யுவா மோர்ச்சா அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நவம்பர் 11ம் தேதி திருவனந்தபுரம் மாவட்டத்தில் 12 மணி நேர கடை அடைப்பு நடத்தப்பட்டது.

இந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பின் தலைவராக செயல்படும் கே.பி.சசிகலாவினை கைது செய்தது தொடர்பாக நவம்பர் 17ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

சபரிமலையில் 144 தடை உத்தரவை நீக்கக் கோரி டிசம்பர் மாதம் முதல், கேராளாவின் தலைமைச் செயலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டிருந்தனர். டிசம்பர் 14ம் தேதி அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முட்டடை பகுதியை சேர்ந்த வேணுகோபாலன் நாயர், ஐயப்ப கோஷம் எழுப்பியவாறு உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டார்.  வேணுகோபாலன் நாயரின் மறைவைத் தொடர்ந்து நான்காவது முறையாக டிசம்பர் 14ம் தேதி 12 மணி நேர கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தது பாஜக.

இந்நிலையில் இன்று கோவிலிற்குள் பெண்கள் நுழைந்ததிற்காக ஐந்தாவது முறையாக இந்து அமைப்பினர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள்.

08: 40 AM : ஸ்தம்பித்து நிற்கும் கேரளா

Kerala Sabarimala hartal LIVE updates, கலூர் மார்கெட், கொச்சி

கலூர் மார்கெட், கொச்சி

Kerala Sabarimala hartal LIVE updates, கலூர் மார்கெட், கொச்சி

கலூர் மார்கெட், கொச்சி

வெறிச்சோடிய சாலைகள்

கேரளா உயர்நீதிமன்றத்தின் அருகே

08:30 AM : கேரளா முழுவதும் ஐந்தாவது முறையாக முழு கடையடைப்பு

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து இதுவரை பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கேரளாவில் ஐந்தாவது முறையாக முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

08:00 AM : இந்து அமைப்பைச் சேர்ந்தவர் பலி

இந்து இயக்கத்தை சேர்ந்த அமைப்பினர் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர். அதூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினருக்கும் பொதுவுடமை கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் தாக்குதல் நடந்தது.

சந்திரன் உன்னிதன் என்ற 55 வயது மதிக்கத்தக்க இந்து அமைப்பைச் சேர்ந்தவர், தாக்குதலுக்கு ஆளாகி நேற்று இரவு 10:30 பலியானார். கேரள மாநிலத்தில் இருக்கும் பந்தளம் மாவட்டம், குரம்பாலா பகுதியில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala Sabarimala hartal LIVE updates – பெண்கள் சபரிமலைக்கு சென்ற வீடியோ

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close