New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/h4.jpg)
kerala sabarimala
இதில் அனைத்து வயதுடைய பெண்களும் கோவிலுக்கு செல்லலாம்
kerala sabarimala
kerala sabarimala : சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோயில் உலக புகழ்பெற்ற ஒன்று. கடந்த ஆண்டு சபரிமலையில் நடந்த சர்ச்சைகள் அனைத்தும் அனைவரும் அறிவோம். கோடிக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து செல்லும் சபரிமலை கோயிலுக்குள் ஐயப்பனை தரிசிக்க 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய காலம் காலமாக தடை இருந்து வந்தது. .
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பல ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பு வெளியானது. இதில் அனைத்து வயதுடைய பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.
தீர்ப்பு பின்பு போராட்ட இடமாக சபரிமலை மாறியது. கோவிலில் நுழைய முயன்ற பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். டிசம்.,- ஜன., மாதங்களில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களும் கலவரங்களும் வெடித்தன.
இந்நிலையில், சபரிமலை கோயில் தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் சபரிமலை கோயிலின் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.