ஆன்லைன் வகுப்பு வசதி இல்லாததால் மாணவி தற்கொலை - கேரளாவில் சோகம்

Kerala : ஆன்லைன் வகுப்புகள் தற்போது சோதனை முறையிலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த சில வாரங்களில் முழுவதுமாக நடத்தப்படும்

கேரள மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, ஆன்லைன் முறையிலான வகுப்புகள் துவங்கியுள்ளன. இதனிடையே, மலப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் தனது வீட்டில் ஆன்லைன் வகுப்புக்கான கட்டமைப்பு இல்லாத காரணத்தினால், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள கல்வித்துறை அமைச்சர் சி ரவீந்திரநாத், இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை அறிக்கை அறிக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி 14 வயதான தேவிகா என்றும், அவர் வலஞ்சேரி பகுதியை அடுத்த மங்கேரியை சேர்ந்தவர். இவர் தலித் மாணவி என்றும், பெற்றோர் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர். தேவிகா காணவில்லை என்று பெற்றோர், போலிசில் புகார் அளித்திருந்தனர்.
தேவிகா தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மருத்துவர்களின் ஆய்வுக்கு பிறகே முழு உண்மையும் என்று தெரியவரும் என்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் காஜி தெரிவித்துள்ளார். அவர் மேலும் விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஊடகங்களிடம் அவளது பெற்றோர் கூறியதாவது, அவள் முதல்நாள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. வீட்டில் டிவி ரிப்பேர் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்டவைகள் கிடையாது. இதனால் தான் அவள் தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக KiTE Victers தொலைக்காட்சி சேனல், இணையதளம் மற்றும் சமூகவலைளதங்களின் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேவிகாவின் தந்தை பாலகிருஷ்ணன், ஏசியாநெட் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஆன்லைன் வகுப்பு துவங்குவதையொட்டி, வீட்டில் டிவி மாட்டினேன். ஆனால் ரிப்பேர் ஆகிவிட்டது. பள்ளியில் இருந்து தந்த டேப்லெட்டில் இணையதள வசதி இல்லாததால், பக்கத்து வீட்டுக்கு சென்று பாடம் படித்து வருவதாக கூறி சென்றாள். ஆனால், அவள் அங்கு என்ன செய்தாள் என்பது தெரியவில்லை என்று அவர் கூறினார்.

தேவிகாவின் பாட்டி கூறியதாவது, தேவிகா படிப்பில் கெட்டிக்காரி. அவள் தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு கோழை அல்ல. என்ன ஆனது என்பது தெரியவில்லை.

கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் கூறியதாவது, அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்பு வசதியை பெற கல்வித்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் தற்போது சோதனை முறையிலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த சில வாரங்களில் முழுவதுமாக நடத்தப்படும். இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Kerala: Class X student takes own life allegedly due to lack of access to virtual classes

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close