Shaju Philip
கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (CUSAT) தொழில்நுட்ப திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சனிக்கிழமையன்று நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Kerala: Stampede at CUSAT fest kills 4 students, over 60 injured
கொச்சி அருகே உள்ள களமசேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உறுதிப்படுத்தினார்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் என்.எஸ்.கே.உன்மேஷ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து கொச்சியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளோம். இறந்த 4 பேரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, காயமடைந்தவர்களில், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் அடையாளங்களை போலீசார் இன்னும் கண்டறியவில்லை.
பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இசை நிகழ்வின் போது இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் மற்ற கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மழை பெய்யத் தொடங்கியதும், பார்வையாளர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மழையிலிருந்து தப்பிக்க ஆடிட்டோரியத்திற்கு விரைந்தனர், இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒரு சில மாணவர்கள் ஆடிட்டோரியத்தின் படிக்கட்டில் தவறி விழுந்தபோது, மற்றவர்கள் அவர்களை மிதித்ததால் இந்தச் சோகம் ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“